பக்கம் எண் :

தொகைகள்1கி. செம்பியன்

1. தொகை - விளக்கம்

      தொகை என்றால் தொகுக்கப்படுதல், தொக்கிவிடுதல் அதாவது
மறைந்துவிடுதல் என்று இருபொருள் உண்டு. 'எட்டுத்தொகை' என்பதற்குத்
தொகுக்கப்பட்ட எட்டு நூல்கள் என்று பொருள்; உவமைத் தொகை என்று
சொல்லும்போது உவம உருபு மறைந்து சுருங்கி வந்திருக்கிறது என்று பொருள்.
தமிழ்மொழி நீட்டிப் பேசுவதற்கும் சுருக்கிப் பேசுவதற்கும் இடம் தருகிறது. இந்தப்
பண்பு மற்ற மொழிகளிலும் இருக்கலாம். வடமொழியில் உண்டு; ஆங்கில மொழியிலும்
உண்டு. கால்பந்துக்கு உரிய களம் என்று நீட்டிப் பேசாமல் foot ball ground என்று
சுருக்கியே பேசுவர்; ஷு வினது பாலீஷ் என்று சொல்லாமல் shoe polish என்றே
மொழிவர். இப்படி இன்னும் பல சுருக்கமொழிகள் இருக்கின்றன. சட்டத்தினை
இயற்றும் சபை என நீளமாகப் பேசாமல் சட்டசபை என்றே பேசுகின்றோம். இது
மொழியில் இயற்கையாகவே அமைந்திருக்கும் ஒரு நுட்பம். இந்த நுட்பத்தைப்
புரியவைப்பதே இலக்கணம். பூமியில் இயற்கையாகவே ஈர்ப்புச் சக்தி இருந்தது.
அதனைப் புரியவைத்தவரே சர் ஐசக் நியூட்டன். நியூட்டன் புதிதாக எதையும்
கொண்டுவந்து பூமிக்குள் நுழைக்கவில்லை; அதுபோலத்தான் இலக்கணமும்.
மொழிக்குள் யாரும் எதையும் திணிக்கவில்லை; ஆய்வுத் திறத்தால் பகுத்து
உணர்ந்து, உறைந்துகிடக்கும் நுட்பங்களை எடுத்துரைத்துள்ளனர் இலக்கணப்
புலவோர். சிற்றூரில் வாழும், எந்த இலக்கணத்தையும் பயிலாதவன், ஏன், தான்
பேசும் மொழியின் பெயர் 'தமிழ' என்பதைக்கூட அறியாதவன் 'கடையாணி' என்று
பேசுகிறான்! இச்சொற்கூட்டை விரித்தால் கடையின்கண் பொருத்தப்படும் ஆணி
என்று பொருள் வரும். கடை என்பதற்குக் கடைசியில் என்று பொருள். அச்சாணியின்
இரு கடைகளிலும் (at the ends) பொருத்தப்படும் ஆணி என விரிவடையும்.
எனவே, இலக்கணத்தைப் படித்துவிட்டுப் பேசுவதன்று மொழி; இயற்கையாக
மொழியில் அமைந்து மறைந்து நிற்பதே இலக்கணம். கடை+ஆணி ஆகிய
இருசொற்கள் சேர்ந்து ஒருசொல்லாகக் காட்சியளிக்கின்றது. இங்கே இரண்டு
இலக்கணங்கள் உள்ளன; ஒன்று -கண்ணுக்குத்