பக்கம் எண் :

தொகைகள்13கி. செம்பியன்

3. மூன்றாம் வேற்றுமைத் தொகை

     மூன்றாம் வேற்றுமை உருபு 'ஒடு' என்றார் தொல்காப்பியர், உரையாசிரியர்கள்
'ஆன்', 'ஆல்' எனும் உருபுகளையும் குறிப்பிட்டார்கள். இவ்வேற்றுமை அடிப்படையில்
வினைமுதல், கருவி ஆகிய இரு பொருள்களில் பயின்றுவரும்
என நூற்பாயாத்துள்ளார் தொல்காப்பியர்.
கருவி - வேலான் எறிந்தான்
வினைமுதல் - அகத்தியனால் தமிழுரைக்கப்பட்டது
வினைமுதல், கருவி ஆகிய பொருள்களில் 'ஒடு' உருபு இக்கால வழக்கத்தில்
கையாளப்படுவதில்லை. மூன்றாம் வேற்றுமையின் அடிப்படையான வினைமுதல்,
கருவி ஆகிய இரு பொருள்களை இன்னும் பலவாறாக விவரித்துக் கூறியுள்ளார்
தொல்காப்பியர்.

அதனின் இயறல் - மண்ணான் இயன்ற குடம் (முதல்)
அதன்தகு கிளவி - வாயான் தக்கது வாய்ச்சி, அறிவான்
அமைந்த சான்றோர் (கருவி)
அதன் வினைப்படுதல் - சாத்தனான் முடியும் இக்கருமம் (வினைமுதல்)
அதனின் ஆதல் - வாணிகத்தான் ஆயினான் (கருவி)
அதனின் கோடல் - காணத்தான் கொண்ட அரிசி (கருவி)
அதனொடு மயங்கல் - எண்ணொடு விராய அரிசி
அதனோடு இயைந்த - ஆசிரியனொடு வந்த மாணாக்கன்
ஒருவினைக் கிளவி (வருதல் தொழில்
இருவர்க்கும் பொது)
அதனோடு இயைந்த - மலையொடு பொருத மால்யானை
வேறுவினைக் கிளவி (மலைக்கு ஒரு வினை,
யானைக்கு வேறு வினை)
அதனோடு இயைந்த - பொன்னோடு இரும்பு அனையர் ஒப்பல்
ஒப்புரை நின்னொடு பிறரே