| ஏவுகணைத் தாக்குதல் |
> |
ஏவுகணையால் தாக்குதல் |
| தீக்குளித்தல் |
> |
தீயால் குளித்தல் |
| கைதொழுது |
> |
கையால் தொழுது |
| சிறை காக்கும் காப்பு |
> |
சிறையால் காக்கும் காப்பு |
| பீரங்கித் தாக்குதல் |
> |
பீரங்கியால் தாக்குதல் |
| விமானத் தாக்குதல் |
> |
விமானத்தால் தாக்குதல் |
| மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் |
|
உடன்தொக்க தொகை |
| அஞ்சல்வழிக் கல்வி |
> |
அஞ்சல்வழியால் கற்பிக்கப்படும்கல்வி |
| அணுக்குண்டு |
> |
அணுவினால் ஆகிய குண்டு |
| அரவணை= அரவு+அணை |
> |
அரவினால் ஆகிய அணை
அரவு-பாம்பு; அணை- மெத்தை |
| இரும்புக் கம்பி |
> |
இரும்பினால் ஆகிய கம்பி |
| இனச் சிக்கல் |
> |
இனத்தினால் உண்டான சிக்கல் |
| உதவித்தொகை |
> |
உதவியால் கிட்டிய தொகை |
| உளுந்து வடை |
> |
உளுந்தினால் தட்டப்பட்ட வடை |
| எறும்புப் புற்று |
> |
எறும்பினால் கட்டப்பட்ட புற்று |
| கதர்ச் சட்டை |
> |
கதரால் நெய்யப்பட்ட சட்டை |
| கட்டு மரம் |
> |
கட்டினால் இணைக்கப்படும் மரம்
(மரம்- சிறிய படகிற்கு ஆகுபெயர்) |
| கண்ணாடி பாட்டில் |
> |
கண்ணாடியால் ஆகிய பாட்டில் |
| கருத்துக்கணிப்பு |
> |
கருத்தினால் செய்த கணிப்பு |
| கருங்கல் சுவர் |
> |
கருங்கல்லால் கட்டப்பட்ட சுவர் |
| கருணைக் கொலை |
> |
கருணையால் விளைந்த கொலை |
| கரும்பு வில் |
> |
கரும்பினால் ஆன வில் |
| கல்லணை |
> |
கல்லால் ஆகிய அணை |
| கறையான் புற்று |
> |
கறையானால் ஆகிய புற்று |
| காதல் மணம் |
> |
காதலால் நடந்த மணம் |