| சந்திரமண்டலம் | > | சந்திரனுக்கு உரிய மண்டலம் |
| சமுதாயக் கூடம் | > | சமுதாயத்திற்கு உரிய கூடம் |
| சூரிய மண்டலம் | > | சூரியனுக்கு உரிய மண்டலம் |
| செட்டிநாடு | > |
செட்டிக்கு உரிய நாடு (செட்டியது நாடு
என ஆறாம் வேற்றுமை யாகவும் கருத முடியும்) |
| செல்வக் களஞ்சியம் | > | செல்வத்திற்கு உரிய களஞ்சியம் |
| தமிழர் திருநாள் | > |
தமிழருக்கு உரிய திருநாள் (தமிழரது திருநாள்
எனவும் அமைக்கலாம்) |
| தலையணை உறைகள் | > | தலையணைக்கு உரிய உறைகள் |
| தாய்நாடு | > | தாய்க்கு உரிய நாடு |
| தாயாகத் தமிழர் | > | தாயகத்திற்கு உரிய தமிழர் |
| திருமகள் | > | திருவிற்கு உரிய மகள் |
| திருமண அழைப்பிதழ் | > | திருமணத்திற்கு உரிய அழைப்பிதழ் |
| தூக்குமேடை | > | தூக்கிற்கு உரிய மேடை |
| தெப்பக்குளம் | > | தெப்பத்திற்கு உரிய குளம் |
| தேநீர் நிலையம் | > | தேநீருக்கு உரிய நிலையம் |
| தேர் வீதி | > | தேருக்கு உரிய வீதி |
| தொழிற் கல்வி | > | தொழிலுக்கு உரிய கல்வி |
| தொழிற் நுட்பம் | > | தொழிலுக்கு உரிய நுட்பம் |
| தொழிற் பேட்டை | > | தொழிலுக்கு உரிய பேட்டை |
| நகாராட்சிக் கூட்டம் | > | நகராட்சிக்கு உரிய கூட்டம் |
| நகைக் கடன் | > | நகைக்கு உரிய கடன் |
| நீதிமன்றம் | > | நீதிக்கு உரிய மன்றம் |
| நுழைவுத் தேர்வு | > |
நுழைவிற்கு (பொறியியல், மருத்துவம்
ஆகியவற்றில் நுழை வதற்கு) உரிய தேர்வு
(சின்ன வளையத்திற்குள் நுழைந்து வரச் சொன்னால்,
அதுவும் நுழைவுத் தேர்வு) |