பக்கம் எண் :

தொகைகள்45கி. செம்பியன்

9, சில நுட்பங்கள்

      கிளிக்கூடு > இத்தொடரை கிளியினது கூடு என ஆறாம் வேற்றுமைத்
தொகையாகக் கருதவேண்டும். கிளியால் கட்டப்பட்ட கூடு என்றும் கருதலாம்.

      கிளிக்கூண்டு > இத்தொடரை இடப் பிறிதின் கிழமையாகக் கருதிக் கிளியது
கூண்டு எனக் ஆறாவதாகக் கொண்டால், கூண்டு கிளிக்குச் சொந்தம் போலத்
தெரியும்; கிளியை அடைக்கும் கூண்டு அல்லது கிளிக்கு உரிய கூண்டு என
இரண்டாவதாகவோ நான்காவதாகவோ கருதவேண்டும்.

      குண்டர் சட்டம் > குண்டருக்கு உரிய சட்டம் என நான்காவதாகக் கருதும்
அதே வேளையில், இத்தொடரைக் குண்டரால் இயற்றப்பட்ட சட்டம் என
மூன்றாவதாகவும் கருத முடியும். எந்தப் பொருளில் சொல்வோன் கருதுகின்றானோ
அதற்கேற்ப பொருள் விரிக்கலாம்.

      கொடிமரம் > கொடிக்கு உரிய மரம் = இதற்குப் பொருள் தேசியக்கொடி,
கட்சிக்கொடி போன்றவற்றை ஏற்றுவதற்கு உரிய மரம் என்பதாகும். முல்லைக்கொடி
படர்ந்த மரத்தையும் இத்தொடர் குறிக்கலாம் அன்றோ' அப்பொழுது கொடியால்
படரப்பட்ட மரம் என மூன்றாவதாக விரிக்கலாம்,

கூண்டுக்கிளி >

கூண்டின்கண் அடைப்பட்ட கிளி
- 7- ஆம் வே.உ.ப.உ.தொ.தொகை
பச்சைக்கிளி > பச்சை ஆகிய கிளி - பண்புத்தொகை
இரட்டைக்கிளி > இரட்டை ஆகிய கிளி - பண்புத்தொகை
பஞ்சவண்ணக்கிளி >

பஞ்சவண்ணங்களை உடைய கிளி
- 2- ஆம் வே,உ.ப.உ.தொ.தொகை

     தேர் திருவிழா என ஒற்று மிகுக்காமல் எழுதினால் தேரும் திருவிழாவும்
என்று உம்மைத்தொகையாகும். தேர்த் திருவிழா என