பக்கம் எண் :

தொகைகள்49கி. செம்பியன்

10. ஆங்கில இலக்கணத்துடன்

வேற்றுமை என்பதனை ஆங்கிலத்தில் case என்று அழைக்கின்றனர்.

எழுவாய் வேற்றுமை -Nominative case
இரண்டாம் வேற்றுமை
(செயப்படுபொருள்)
-Accusative Case or Objective case
மூன்றாம் வேற்றுமை
(கருவி)
-Instrumental Case
நான்காம் வேற்றுமை
(கோடற்பொருள்)
-Dative Case
ஐந்தாம் வேற்றுமை
(நீக்கற்பொருள்)
-Ablative Case
ஆறாம் வேற்றுமை
(கிழமைப் பொருள்)
-Possessive or Genetive Case
ஏழாம் வேற்றுமை
(இடப்பொருள்)
-Locative Case
எட்டாம் வேற்றுமை
(விளித்தல்)
-Vocative Case

எட்டு வேற்றுமைப் பெயர்களுக்கும் இணையாக இங்கே ஆங்கிலச் சொற்கள்
காட்டப்பட்டாலும், ஆங்கில இலக்கண நூலில், Nominative, Accusative,
Possessive, Dative, Vocative ஆகிய வேற்றுமைகளே எண்ணப்பட்டுள்ளன. 3, 5,
7 ஆகிய வேற்றுமைகள் எண்ணப்படவில்லை,

      தமிழ் மொழியின் இயற்கை ஒட்டுமொழி என்பதால் பெயர்ச்சொற்கள் எந்தச்
சிதையும் அடையாமல் உருபுகளை மட்டும் ஏற்கின்றன. ஆங்கில மொழியில் பல
இடங்களில் முன் மொழிகள் (Prepositions) அந்த வேலையைச் செய்கின்றன.
தமிழ் - கத்தி + ஆல் = கத்தியால்
ஆங்கிலம் - with knife*
தமிழ் - திருமண அரங்கத்தில் (இடப்பொருள்)
ஆங்கிம் - at Marriage Hall
தமிழ் - 7 ஏழு மணிக்கு
ஆங்கிம் _ at 70' Clock