பக்கம் எண் :

தொகைகள்5கி. செம்பியன்

2. இரண்டாம் வேற்றுமைத் தொகை

     முதல் வேற்றுமையிலும், எட்டாம் வேற்றுமையிலும் தொகுக்கப் படுதல்
இல்லையாகவே, இரண்டாம் வேற்றுமையை நோக்குவோம். இரண்டாம் வேற்றுமைக்கு
'ஐ' உருபாகும். இவ்வுருபு வெளிப்பட்டு நிற்காமல் மறைந்து நின்று அதே பொருளை
உணர்த்தினால், இரண்டாம் வேற்றுமைத் தொகை என்று பெயர்.
நிலம் கடந்தான்
இதற்கு நிலத்தைக் கடந்தான் என்று பொருள். இதன்கண் அத்துச் சாரியையும் ஐ
உருபும் வெளிப்பட்டு நிற்கின்றன. அத்தும் ஐயும் மறைந்து நிலங்கடந்தான் என
வந்ததால் அது தொகை.

     இவ்வண்ணம் இரண்டு சொற்கள் இணையும்போது, பெயர்ச் சொல்லும்
பெயர்ச்சொல்லும் இணையலாம் அல்லது பெயர்ச் சொல்லும் வினைச்சொல்லும்
இணையலாம். நடுவில் உருபுகள் வெளிப்படாமல் மறைந்துவிடும்.

     'நிலம் கடந்தான்' எனும் தொடரில் நிலம் பெயர்ச்சொல்,
கடந்தான் வினைச்சொல்.'முருகன் வேல்'எனும் தொடரில் முருகன் பெயர்ச்சொல்;
வேல் என்பதும் பெயர்ச்சொல்.

     'நிலங் கடந்தான்' எனும் தொடரில் 'ஐ' உருபு நடுவில் மறைந்தது; 'கடந்தான்
நிலம்' என்பதிலே 'ஐ' உருபு இறுதியில் மறைந்தது. ஆகவே உருபுகள்
நடுவிலும் மறையலாம்; இறுதியிலும் மறையலாம்.

இரண்டாம் வேற்றுமை ஆறுவகையான பொருள்களில் வரும்.

ஆக்கல் > குடத்தை வனைந்தான் > குடம் வனைந்தான்
அழித்தல் > கோட்டையை இடித்தான் > கோட்டை இடித்தான்
அடைதல் > ஊரை அடைந்தான் > ஊர் அடைந்தான்
நீத்தல் > மனைவியைத் துறந்தான் > மனைவி துறந்தான்