பக்கம் எண் :

தொகைகள்63கி. செம்பியன்

14. உம்மைத்தொகை (அல்வழிப்புணிர்ச்சி)

     உம்மை என்பது எதைக் குறிக்கின்றது' 'உம்' என்பதைக் குறிக்கின்றது.
ஆங்கில மொழியில் and என்பது செய்யும் (day and night) வேலையைத் தமிழில்
'உம்' (இரவும் பகலும்) செய்கிறது. 'உம்' மறைந்துவிட்டால் உம்மைத் தொகை.
இத்தொகை இரண்டு சொற்களுக்கு இடையில் வரும்; பல சொற்களுக்கு இடையிலும்
வரும். இஃது எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என நான்கு வகைப்படும்.


முப்பத்து மூன்று > முப்பதும் மூன்றும் எண்ணல்
உம்மை
கபில பரணர் > கபிலரும் பரணரும்
கழஞ்சே கால் > கழஞ்சும் காலும் எடுத்தல்
தொடியே கஃசு > தொடியும் கஃசும்
கலனே தூணி > கலனும் தூணியும் முகத்தல்
நாழியே யாழாக்கு > நாழியும் ஆழாக்கும்
சாணங்குலம் > சாணும் அங்குலமும் நீட்டல்
சாணரை > சாணும் அரையும்
பாண்டியர் > சேரனும் சோழனும் பாண்டியனும்
புலி வில் கெண்டை > புலியும் வில்லும்
கெண்டையும்
பன்மொழி

  • உயர்திணையில் எண்ணும்போது முடிக்கும் சொல் பலர்பாலாக
    அமைக்கப்பட வேண்டும் (கபிலபரணர்; சேரசோழபாண்டியர்)

  • கபிலபரணர் என்பதில் இரண்டும் பெயர்ச்சொற்கள்; ஆடல்பாடல்
    என்பதில் இரண்டும் தொழிற்பெயர்கள்.

கூடுதல் எடுத்துக்காட்டுகள்
அரிஅரன் அயன்
அறம் பொருள் இன்பம் வீடு