பக்கம் எண் :

தொகைகள்70கி. செம்பியன்

16. தொகைகளைப் பற்றிய பொதுநெறிகள்
  •      வேற்றுமை முதலாகச் சொல்லப்பட்ட ஆறு தொகைகளிலும் பொருள்
    எங்கே சிறந்துநிற்கும் என்றொரு கேள்வியினை எழுப்பி,
    1. முன்மொழி
    2. பின்மொழி
    3. இருமொழி
    4. அன்மொழி
    என நான்கு வகையாக்கிச் சிலவற்றில் முன்மொழியிலும், சிலவற்றில்
    பின்மொழியிலும், சிலவற்றில் இருமொழிகளிலும், சிலவற்றில் அன்மொழிகளிலும்
    பொருள் சிறக்கும் எனப் பதிலளித்துள்ளார் தொல்காப்பியர். இம்முறைத்
    தொல்காப்பியருக்கு முன்பிருந்தே நிலவி வருவதாகத் தெரிகிறது. நன்னூலார்
    இரண்டு மாற்றங்களைக் கண்டுள்ளார் 'இருமொழி' என்பதற்குப் பதிலாகப்
    'பன்மொழி' எனவும் அன்மொழியைப் 'புறமொழி' எனவும் குறிப்பிடுகின்றார்;
    நன்னூலின் நூற்பா:
    முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி எனுநான் கிடத்துஞ் சிறக்குந்
    தொகைப்பொருள்
    இதனடிப்படையில் எடுத்துக்காட்டு:

    1. குடம் வனைந்தான், குழிசி வனைந்தான், வேங்கைப்பூ, சண்பகப்பூ, விரிபூ,
      குவிபூ, செந்தாமரை, வெண்டாமரை, வேற்கண், கயற்கண்
      என்பவைகளிலே
      குடம் முதலிய முன்மொழிகள் (காலமுன்) இனம் விலக்கி நிற்றலால், அம்முன்
      மொழிகளிற் பொருள் சிறந்தன.

    2. நிலம் உழுதான், கண்ணிமை, நீர்க்குவளை, சுடுதீ, செஞ்ஞாயிறு
      என்பவைகளிலே, நிலம் முதலிய முன்மொழிகள் இனமும் இனத்தை
      விலக்குதலும் இன்றி நிற்றலால், உழுதான் முதலிய பின்மொழிகளில்
      (காலப்பின்) பொருள் சிறந்தன.