பிழை திருத்தம்
|
>
|
பிழையும் திருத்தமும்
- உம்மைத்தொகை |
பிழைத் திருத்தம்
|
>
|
பிழையாகிய திருத்தம்
- பண்புத்தொகை
பிழைக்கு உரிய திருத்தம்
- நான்காம் வே.உ.ப.உ.தொ.தொகை |
| கைபிடி | > | கையைப்பிடி - இரண்டாம் வே.தொகை |
| கைப்பிடி | > | ஒரு சாதனம் |
| மலர்கை | > | மலர்தல் |
| மலர்க்கை | > |
மலர் போன்ற கை
- உவமைத்தொகை |
| வெண்ணெய் கடை | > |
வெண்ணெயைக் கடை
- உ.ஆம்.வே.தொகை |
| வெண்ணெய்க் கடை | > |
வெண்ணெயை உடைய கடை
- 2- ஆம்.வே.உ.ப.உ.தொ.தொகை. |
| கலை கழகம் | > |
கலைந்த, கலைகின்ற, கலையும்
- வினைத்தொகை |
| கலைக்கழகம் | > |
கலையைக் கற்பிக்கும் கழகம்
- 2- ஆம்.வே.உ.ப.உ.தொ.தொகை |
| அலை கடல் | > | வினைத்தொகை |
| அலைக் கடல் | > |
அலையை உடைய கடல்
- உ.ஆம்.வே.உ.ப.உ.தொ.தொகை. |
| பசும்பால் | > |
பசுமையாகிய பால்
- பண்புத்தொகை |
| பசுப்பால் | > |
பசுவினதுபால்
- வேற்றுமைத்தொகை
(ஒற்றெழுத்தை மாற்றுவதால்) |
| பசி பிணி | > |
பசியும் பிணியும்
- உம்மைத்தொகை |
| பசிப்பிணி | > |
பசியாகிய பிணி
- இருபெயர் ஒட்டுப் பண்புத்தொகை |