21.2 ஆறு + தண்ணீர் =
கிணறு + திவளை =
வேறு + பொருள் =
|
ஆற்றுத்தண்ணீர்.
கிணற்றுத்தவளை.
வேற்றுப்பொருள்.
|
22. மென் தொடர்க் குற்றியல் உகரச் சொற்களுக்குப் பின்னும்,
உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின்னும், முற்றியலுகரச்
சொற்களுக்குப் பின்னும் வரும் வல்லெழுத்துச் சில இடங்களில் மிகும்.
22.1 வண்டு + கால் =
திண்டு + கல் =
பாம்பு + தோல் =
குரங்கு + கூட்டம் =
கன்று + குட்டி =
பண்பு + தொகை =
பண்பு + பெயர் =
மருந்து + கடை =
|
வண்டுக்கால்.
திண்டுக்கல்.
பாம்புத்தோல்.
குரங்குக்கூட்டம்.
கன்றுக்குட்டி.
பண்புத்தொகை.
பண்புப்பெயர்.
மருந்துக்கடை. |
22.2 முதுகு + தண்டு =
எருது + கொடி =
|
முதுகுத்தண்டு.
எருதுக்கொடி.
|
22.3 உணவு+பொருள் =
செலவு + சொல் =
|
உணவுப்பொருள்.
செலவுச்சொல்.
|
இந்துக்கள், பந்துக்கள், கந்துக்கடன் என்னும் சொற்களில்
வல்லெழுத்து மிகுந்து வருதலும் காண்க.
"பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து
உரவுக்களிறு போல் வந்து இரவுக்கதவம் முயறல்
கேளேம் அல்லேம்; கேட்டனம் பெரும!"
|