பக்கம் எண் :

சில சந்தி முறைகள் 261

14. ன் முன் ந ஆனது ன ஆகும்.

பொன் + நாடு =
தன் + நலம் =
பொன்னாடு.
தன்னலம்.

15. ண் முன் ந ஆனது ண் ஆகும்.

தண் + நீர் =
கண் + நோய் =
விண் + நாடு =
தண்ணீர்.
கண்ணோய்.
விண்ணாடு.

கெடுதல்

1. மாறுபாடு + இல்லை = மாறுபாடில்லை.

இதில் ‘டு’ வில் இருக்கும் குற்றியலுகரம் கெட்டு விட,
டகரமெய் வருமொழி உயிரோடு சேர்ந்துவிட்டது.

செலவு + ஆயிற்று = செலவாயிற்று.

இதில் முற்றியலுகரம் கெட்டுவிட, வகரமெய் வருமொழி
உயிரோடு இணைந்து விட்டது.

2. குளம் + நெல் = குளநெல் (ம் கெட்டது).
அறம் + வினை = அறவினை (ம் கெட்டது).
மரம் + உரி = மரவுரி (ம் கெட்டது).

3. ள் முன் த வரின் ள் கெட்டுத் தகரம் டகரமாகும்.

நாள் + தோறும் =
அவர்கள் + தாம் =
துகள் + தீர் =
நாடோறும்.
அவர்கடாம்.
துகடீர்.

இரட்டிதல்

தனிக்குறில் அணையாத ‘டு’, ‘று’ ஈற்றில் இருக்கிற பெயரில் டு, று
பெற்ற - அதாவது நெடிற்றொடர் உயிர்த் தொடராகிய இவற்றில் உள்ள
குற்றியல் உகரம் கெட - ‘ட்’, ‘ற்’ இரட்டிக்கும்.