பக்கம் எண் :

262நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

வீடு + சுவர் =
வயிறு + வலி =
தமிழ்நாடு + போக்குவரத்து =
ஆறு + நீர் =
கயிறு + கட்டில் =
மூடு + பச்சி =
குருடு + கண் =
ஓடு + வீடு =
நாடு + பற்று =
வீட்டுச்சுவர்.
வயிற்றுவலி.
தமிழ்நாட்டுப் போக்குவரத்து.
ஆற்றுநீர்.
கயிற்றுக்கட்டில்.
மூட்டுப்பூச்சி.
குருட்டுக்கண்.
ஓட்டுவீடு.
நாட்டுப்பற்று.

கீழ்வருவனவற்றையும் படித்துத் தெரிந்து கொள்க

பண்டு + காலம் =
இன்று + நாள் =
நேற்று + பொழுது =
நேற்று + கூலி =
*
தெற்கு + கிழக்கு =
தெற்கு + மேற்கு =
தெற்கு + நாடு =
தெற்கு + மொழி =
தெற்கு + கடல் =
தெற்கு + ஊர் =
மேற்கு + காற்று =
மேற்கு + கடல் =
மேற்கு + கால் =

பண்டைக்காலம்.
இற்றைநாள்.
நேற்றைப்பொழுது.
நேற்றைக்கூலி.
* *
தென்கிழக்கு.
தென்மேற்கு.
தென்னாடு.
தென்மொழி.
தெற்குக்கடல்.
தெற்கூர்.
மேல்காற்று.
மேல்கடல்.
மேற்குக்கால்.