பல்லவி பாடுகிறாள் (ம)
பற்றுக்கோடு
பகற்கனவு (செய்த தீமையை மறந்து
விடலாம் என்பது பகற்கனவு.)
பகல் வேடம்
பகீரத முயற்சி
பச்சைப்பசேல்
பச்சைகொடி காட்டிவிட்டான்.
பாயும் படுக்கையுமாய் (இருக்கிறேன்)
பித்தலாட்டம் (எய்த்தல்)
(பித்தளையை ஆடகமாக (பொன்னாக)மாற்றுவதாகச்
சொல்லி எய்த்தல்.)
புத்துணர்ச்சி
புத்தகப்பூச்சி (ம)
பூதவுடலை விட்டுப் புகழுடலை
எய்தினார்
பேரும் புகழும்
பொன்னும் பொருளும் (கொடுத்தான்).
பொடிவைத்தல் (தந்திரமாய்ப் பேசுதல்)
ம
மலையேறிவிட்டது. (ம)
மனத்தை உருக்க வல்ல
மட்டற்ற மகிழ்ச்சி (மட்டு - அளவு)
மட்டுமரியாதை (இல்லாமல் பேசாதே.)
(மட்டு - நிதானம்) |
மண்ணுலக வாழ்வை விட்டு விண்ணுலக வாழ்வையுற்றார்.
(இறந்தார்) (ம)
மதில்மேல் பூனை (ம)
மனப்பால் குடித்தல் (ம)
மனக்கோட்டை (ம)
மாடமாளிகை
முற்றத் துறந்த முனிவரும்
முற்றாத அறிவு; முதிராத அனுபவம்
முட்டுக்கட்டை போடாதே.
முடிசூடா மன்னன்
முதலைக் கண்ணீர் (விடாதே)
முயற்கொம்பு (ம) (இல்லாத ஒன்று)
மூட்டை முடிச்சுகளைக் கட்டு.
மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி
பெரிது.
மூச்சுப் பேச்சின்றி
மூடுமந்திரமா?
மேலும் கீழும்
ய
யானை உண்ட விளங்கனி
வ
வடித்தெடுத்த பொய்
வத்தி வைத்தல் (மருமகள்
மாமியாரைப் பற்றித் தன்
கணவரிடம் வத்தி வைத்துக்
கொண்டிருந்தாள்). |