பக்கம் எண் :

தமிழன் உரிமை வேட்கை127

வழ

வழிபாட்டை வேட்பதும், அதற்கேற்ற சட்டம் இயற்றுவதும், இறைவனும் எதிர்க்கவொண்ணாப் பிறப்புரிமையே. அதை மறுத்தற்கு 'ஒன்றிய நாட்டினங்கள்' (U.N.) சார்பான உலகத் தீர்ப்பு மன்றத்திற்கும் அதிகாரமில்லை.

    தமிழ் விடுதலையே தமிழன் விடுதலை. தமிழன் இன்னும் விடுதலை பெறவில்லை.

    தமிழர், தாம் குமரிநாட்டுப் பழங்குடி மக்களின் வழியினர் என்னும் வரலாற்றுண்மையறிந்து, முழுவுரிமையும் விரைந்து பெறுக.

- “உரிமை வேட்கை” பொங்கல் மலர் 1975