|
New Page 1
தென்பதும், செந்தமிழ் நிலம் வரவரக் குறுகியும் கொடுந்தமிழ்
நிலங்கள் வரவரப் பல்கி விரிந்தும் போனதினால், பிற்கால உரையாசிரியர்கள் பண்டைச் செந்தமிழ்
நிலத்திற்குள்ளேயே பன்னிரு கொடுந்தமிழ் நிலங்களையும் வகுக்க நேர்ந்ததென்பதும், கொடுந்தமிழ்
நிலத்து மொழிகள் பிற்காலத்துத் திரிபு மிகுதியாலும் ஆரியச் சேர்க்கையாலும் கிளைமொழி நிலையுங்
கடந்த உடன்பிறப்பு மொழிகளாகவும் வேற்று மொழிகளாகவும் கருதப்பட்டதினால்,
“செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப’’
என நன்னூலார் நூற்பா யாக்க நேர்ந்துவிட்ட தென்பதும்,
பிறவும் அறியப்படும்.
வடசொல் என்பது வடமொழிச் சொல். இயற்சொல் முதலிய நான்கனுள்
இஃதொன்றே அயன்மொழிச் சொல்.
ஆகவே, இயற்சொல், திரிசொல் ஆகிய இரண்டும் செந்தமிழ்
என்றும், திசைச்சொல் என்பது கொடுந்தமிழ் என்றும், வடசொல் ஒன்றே அயற்சொல் லென்றும்,
அக்காலத்துத் தமிழில் கலந்த அயன்மொழிச் சொல் வடசொல் ஒன்றே யென்றும், ஆங்கிலம்
போர்த்துக்கீசியம் முதலிய பிறமொழிச் சொற்களை அவ்வம் மொழிப் பெயராலேயே அழைத்தல் வேண்டுமென்றும்,
அவற்றைத் திசைச்சொல்லுள் அடக்குவது வழுவென்றும், அறிந்து கொள்க.
திரவிடம் என்னும் பெயரும் மொழிகளும்
தமிழ் என்னும் சொல், தெலுங்கம் குடகம் துளுவம் என்பன
போல் சிறுபான்மை ‘அம்’ ஈறு பெற்றுத் தமிழம் எனவும் வழங்கும். கடல் கோளுக்குத் தப்பிய
குமரிக்கண்டத் தமிழருள் ஒருசாரார் வடக்கே செல்லச் செல்ல, தட்பவெப்பநிலை வேறுபாட்டாலும்
பலுக்கல் (உச்சரிப்பு). தவற்றாலும் மொழிக்காப்பின்மையாலும், அவர் மொழி மெல்ல மெல்லத்
திரவிடமாகத் திரிந்ததும். திரவிடராக உடன் திரிந்தனர். தமிழ் சிறிது சிறிதாகப் பெயர்ந்து
திரவிடமாய்த் திரிந்ததினாலேயே, வடநாடுகளை வேற்று மொழி நாடென்னாது “மொழிபெயர் தேயம்”
என்றனர் முன்னோர்.
“மொழிபெயர் தேஎத்த ராயினும்” என்பது குறுந்தொகை (11)
தமிழ் திரவிட மொழிகளாகத் திரிந்த முறைக்கிணங்கத் தமிழம் என்னும் பெயரும் திரமிளம் - த்ரமிடம்
- த்ரவிடம் எனத் திரிந்தது.
ஒ.நோ: தோணி - த்ரோணி (வ.), பவழம் - ப்ரவாளம்
(வ.) பித்தளை -
இத்தடி (தெ.), குமி - குவி ( த.).
|