|
மக
மக்களையும் தமிழர், தமிழரல்லாதார் என்றே பிரித்தல்
வேண்டும், ஆயினும், தமிழைப் போற்றுவாரெல்லாம் தமிழரென்றே கொள்ளப் பெறுதல் வேண்டும்.
தமிழன் உயர்ந்தவன்
உலகில் முதன்முதல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடைந்து,
அவற்றைப் பிற நாடுகளிற் பரப்பினவன் தமிழனே. ஆதலால், அவன் எட்டுணையும் ஏனையோர்க்குத் தாழ்ந்தவனல்லன்.
தமிழ் வல்லோசையற்ற மொழியென மூக்கறையன் முறையிற் பழிக்கும் திரவிடர் கூற்றையும், பிறப்பொடு
தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவினை பற்றித் தமிழனே இழித்துக் கூறும் ஆரிய ஏமாற்றையும்,
பொருட்படுத்தாது, ‘நான் தமிழன்’ என ஏக்கழுத்தத்துடன் ஏறுபோற் பீடு நடை நடக்க.
தாழ்வுணர்ச்சி நீங்குந் தகைமைக்கட் டங்கிற்றே
வாழ்வுயர்ச்சி காணும் வழி.
தமிழ் வாழ்க!
- அண்ணல் சுப்பிரமணியனார் மணிமலர் 1959
|