பக்கம் எண் :

142தமிழர் மதம்

    விருந்தோம்பும் இயல்பும் ஈகையும் பிராமணனுக்கின்மை யால், இல்லறம் அவனுக் குரியதன்று.

    பிராமணன் தொழிலாகச் சொல்லப்படும் ஆறனுள், ஈதல் என்பது ஓதுவித்தலில் அடங்குதலால், உண்மையில் அவன் தொழில் ஐந்தே.

    அருளுடைமை, புலான்மறுத்தல், தவம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை, துறவு, மெய் யுணர்தல், அவாவறுத்தல் என்பன துறவுநெறி யறங்களாகத் திருக்குறள் மறையிற் சொல்லப்பட்டுள்ளன.

    கொலைவேள்வி செய்தலாலும், துறவுநிலையிலும் 'அகம் பிரமம்' என்றும் 'சிவோகம்' என்றும் அகங்கரிப்பதாலும், தமிழ மதத்தை ஆரிய மதமென்றும் தன்னை நிலத்தேவன் என்றும் தன் இலக்கிய மொழியைத்  தேவமொழி என்றும் சொல்லி இந்தியப் பழங்குடி மக்களை ஏமாற்றுவதாலும், பிராமணனுக்குத் துறவறமும் உரியதாகாது.

    ஆகவே, பிராமணனுக்கு நாடும் பேச்சுமொழியும் போன்றே அறவாழ்க்கையும் இல்லையாம்.

4. சிவமதமும் திருமால் மதமும் தமிழ மதங்களே

சிவமதம் தமிழர் மதம் என்பதற்குச் சான்றுகள்

    (1) 'சேயோன் மேய மைவரை யுலகமும்" என்று, முருக
வணக்கம் தமிழகத்துக் குறிஞ்சிநிலத்திற் குரியதாகத்
தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டிருத்தல் (அகத். 5)
    (2) சிவபெருமான் வெள்ளிமலை யிருக்கையும், மலைமகள்
என்னும் பெயரும்,கொன்றைமாலையும் காளையூர்தியும்
சூலப்படையும் அக்கமணியும், குறிஞ்சித்திணைக் குரியன
வாதல்.
   
    (3) "தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே",
   
  "மன்னு மாமலை மகேந்திர மதனிற்
  சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்",
   
  "மந்திர மாமலை மகேந்திர வெற்பன்",
   
  "பாண்டி நாடே பழம்பதி யாகவும்"
   
  "தென்னா டுடைய சிவனே போற்றி
  யெந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி",

என்று மாணிக்கவாசகர் கி. பி. 3ஆம் நூற்றாண்டிற் பாடியிருத்தல்.