|
ல ள ழ மூன்றும் ஒரே காலத்துத்
தோன்றவில்லை. ல முன்னும் ள இடையும், ழ பின்னும்
தோன்றின. ஆதலால், அல்லீறு பின்னர் முறையே அள்.
அழ் எனத் திரிந்தது.
லகர மெய்யீறு ரகர மெய்யீறாகத்
திரியும்.
எ-டு: குடல்-குடர்.
லகரம் தகரமாகவும் திரியும். ஆயின்,
வல்லின மெய் தமிழில் ஈறாகாமையால் உகரம்
ஏறப்பெறும்.
எ-டு: மெல்-மெது.
|
அள்-குறள் இள்-செதிள் உள்-உருள்
|
அழ்-புகழ்
இழ்-குமிழ்
உழ்-கலுழ்
|
அர்-வளர்
இர்-குளிர்
உர்- - |
துளிரைத் துளுர் என்பது கல்லா மக்கள்
உலக வழக்கு.
ரறவும் தமிழில் ஒரே காலத்துத்
தோன்றவில்லை. ர முன்னும் ற பின்னும் தோன்றின.
ரகர மெய்யீறு சிலவிடத்து றகரமாகத் திரியும்.
றகரம வல்லின மெய்யாதலின், உகரம் ஏறப்பெறும்.
எ-டு: ஒளிர்-ஒளிறு
அர்-அறு
இர்-இறு
உர்-உறு |
எ-டு : சிதறு
எ-டு : குளிறு
எ-டு : குமுறு |
நால்வகை யீறுகள்
தனியீறு, கூட்டீறு, திரியீறு, விரியீறு என
ஈறுகள் நால்வகைப் படும். ‘அம்‘ போன்றது தனியீறு;
‘அம்பு‘ (அம்+பு), ‘அம்பம்‘ (அம்+பு+அம்) போன்றவை
கூட்டீறு. அன், அல், அள், அழ், அர், அது, அறு என்பனவும்
இவற்றிற்கொத்த இகர வுகர முதலீறுகளும் திரியீறு;
‘அக்கு‘ (அ கு-அக்கு), அத்து (அது-அத்து) போன்றன
விரியீறு.
இவற்றிற் கெடுத்துக்காட்டு வருமாறு:
|
ஈறு
|
எடுத்துக்காட்டு
|
அம்-அம்பு
அம்-அம்பு-அம்பம்
அம்பு
அம்பு-அம்பம்
|
புறம்-புறம்பு
அரம்-அரம்பு-அரம்பம்
வில்-விளம்பு
சிலம்பு-சிலம்பம் |
|