பக்கம் எண் :

38தமிழ் வளம்

பொருளும் ஆட்சி மேற்கோளும்

 

இஞ்சி1, பெ. திண்ணிய கோட்டை மதில் வகை
"கொடுங்க ணிஞ்சி" (பதிற்றுப். 16:1).

 

"உயர்வகலந் திண்மை யருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கு நூல்"

 

(743)

என்னுந் திருக்குறளிற் குறித்துள்ள திண்மை என்னும் வகைப்படி. "செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை" யே (புறம். 201) இஞ்சி என்னும் மதில் வகையாகும்.

 

இஞ்சி2, பெ. 1. இஞ்சிப் பூண்டு; ginger-plant. "மஞ்சளும் இஞ்சியும் மயங்கரில் வலயத்து" (சிலப் 10:74). 2. இஞ்சிக் கிழங்கு; ginger-root.

ஆட்சி மேற்கோள் :

 

இஞ்சி1 - "செம்பிட்டுச் செய்த விஞ்சித் திருநகர்ச் செல்வந் தேறி" (கம்பரா. யுத்த. 160)

 

செ.சொ.பி. அகரமுதலியில் இன்னும் எண் மேற்கோள் காட்டப் பெறும் விரிவஞ்சி அவை இங்கு விடப்பட்டுள.

இஞ்சி வகை:

 

இஞ்சி மாங்காய் அல்லது மாங்காயிஞ்சி. ஊறுகாயாகப் பயன்படுவது; Mango - ginger.

கூட்டுச் சொல்:

 

இஞ்சிக் கிழங்கு பெ. ginger-root.

 

இஞ்சித்தேறு, பெ. இஞ்சித் துண்டு; small piece of green ginger.

 

இஞ்சிப்பாகு, பெ. இஞ்சி இளகிய (லேகிய) வகை; a kind of ginger electuary.

 

இஞ்சிப் பாவை, பெ. இஞ்சிக் கிழங்கு (மலைபடு. 125, உரை). ginger, as bearing the shape of a doll.

 

இஞ்சி யூறுகாய் = காயச் சரக்குச் சேர்த்து எண்ணெயில் ஊற வைத்த இஞ்சி, ginger-pickle

 

இஞ்சி வேர், பெ. இஞ்சிக் கிழங்கு ginger - root.

 

இஞ்சிச் 'சுரசம்' என்பதை இஞ்சிக்கருக்கு என்றும், இஞ்சி 'முரப்பா' என்பதை இஞ்சி வடிப்பு என்றும், சொல்லலாம்.

மரபு வழக்கு : இஞ்சி தின்ற குரங்குபோற் பஞ்சரித்தல்(தொந்தரவு செய்தல்).

தொடர்மொழி : இஞ்சி தின்ற குரங்கு.

உவமைப் பழமொழி : இஞ்சி தின்ற குரங்கு போல.