வாணிகன் வகை - அறுவை வாணிகன் (சவளிக்கடைகாரன்), கூல வாணிகன் (தவசக் கடைகாரன்), பொன்வாணிகன் (காசுக் கடைகாரன்), ஊன்வாணிகன்(இறைச்சிக் கடைகாரன்). வாணியன் வாணிகன்-வாணியன். வகை- | (1) | எண்ணெய் வாணியன், (வாணியன், செக்கான்,சக்கரத்தான்). |
| (2) | இலை வாணியன் (கொடிக்கால் வேளாளன்). பட்டம் - மூப்பன், பிள்ளை. |
வில்லி வேடருள் ஒரு பிரிவான் (வில்வேடன்). வெள்ளாளன் உழுதுண்ணும் வேளாளனாகிய காராளனுக்குஎதிரானவன், உழுவித்துண்ணும் வேளாளனாகியவெள்ளாளன். ஒ.நோ: களமன் x வெண்களமன். வகை: (1) | பாண்டி(ய) வெள்ளாளன். பிரிவு - கார்காத்த வெள்ளாளன், சிவனிய (சைவ) வெள் ளாளன், கோட்டை வெள்ளாளன், நங்குடி வெள்ளாளன், அரும்பூர் (சிறுகுடி) வெள்ளாளன், நீறு பூசி வெள்ளாளன். | (2) | சோழிய வெள்ளாளன். | (3) | தொண்டைமண்டல வெள்ளாளன். | (4) | துளுவ வெள்ளாளன். பட்டம் - பிள்ளை. | (5) | கொங்கு வெள்ளாளன். பிரிவு-ஆறை நாடு, ஒருவங்க நாடு முதலிய 24 நாடுகள். |
அந்துவன், ஆதி முதலிய 60 குலங்கள். தலைவன் பட்டம் - நாட்டுக் கவுண்டன், பட்டக்காரர், மன்றாடியார்
|