மேவிய கோட்டத் திலுங்கரி கால வளவன்மிக்க வாவிய மேன்மை கொடுத்தளித் தான்றொண்டை மண்டலமே" | |
என்பது, 17ஆம் 18ஆம் நூற்றாண்டிலிருந்தபடிக்காசுப் புலவர் பாடியது. சோழனுக்கு வலக்கைப் பக்கம்அமர்ந்திருந்த குலத்தார் வலங்கையர் என்றும்,இடக்கைப் பக்கம் அமர்ந்திருந்த குலத்தார்இடங்கையர் என்றும் பெயர் பெற்றதாகஉய்த்துணரலாம். பகைகொண்ட இருசாரார் ஒரேபக்கத்தில் இருந்திருக்க முடியாது. இருகையிலும் பல குலத்தார்சேர்ந்திருப்பினும், வலங்கையில் வேளாளரும்,இடங்கையிற் கம்மாளருமே தலைமையானவர் என்று கருதஇடமுண்டு. சோழராட்சிக்குப்பின் பல்வேறரசுகள் ஏற்பட்டதனாலும், பல புதுக் குலங்கள்தோன்றியதனாலும், ஆங்கிலர் அரசாட்சிக்காலத்தில் மீண்டும் வலங்கை யிடங்கைச் சச்சரவுகிளர்ந்தெழுந்தது. 1809ஆம் ஆண்டு சூலை மாதம் 25ஆம்பக்கல், செங்கழுநீர்ப்பட்டு மாவட்ட நயன்மைத்தீர்ப்பாளர் சார்சு கோல்மன் (GeorgeColman) துரை, அவ் வழக்கைத் தீர்த்துஒவ்வொரு குலத்தார்க்கும் உரியவற்றைத் திட்டஞ்செய்தார். வலங்கைக் குலங்கள் | இடங்கைக்குலங்கள் | வேளாளன், அகம்படியான், இடையன், சாலியன், பட்டணவன், சான்றான், குறவன், குறும்பன், வள்ளுவன், பறையன் முதலியன. | கம்மாளன், பேரிச் செட்டி, நகரத்துச் செட்டி, கைக்கோளன்,பள்ளி (வன்னியன்), வேடன், இருளன்,பள்ளன், இரட்டைமாட்டுச் செக்கான் முதலியன. |
இடங்கையினும் வலங்கை பெருங்கை.மேளகாரன், கணிகை (தாசி), பணி செய்வோன் முதலியகுலங்களில் இருகையு முண்டு. ஒருசில குலங்களில் ஆடவர்ஒரு கையும் பெண்டிர் ஒரு கையும் ஆவர். வடுக கன்னடநாடுகளிலும் இவ் வகுப்புகள் இருப்பதால், அந்நாட்டுப் பகுதிகள் 11ஆம் நூற்றாண்டிலும் தமிழ்நாடாயிருந்தமை அறியப்படும். "இத் தமிழ்நாட்டில் ஒவ்வொருநகரத்திலும் சிற்றூரிலும் இடங்கை வலங்கையார்வசிப்பதற்கு வீதிகள் தனித்தனியே ஏற்பட்
|