குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர்" | (கலித்.9) |
என்னும் பாலைக்கலித் தரவையும்"உறியிலே தங்கின கமண்டலத்தையும், அரி அயன்அரனென்னும் மூவரும் ஒருவரென்று சொல்லுதல்தன்னிடத்தே அமைந்த முக்கோலையும், முறைமைபடத்தோளில் வைத்து............போதலை இயல்பாக வுடையஒழுக்கத்தினை யுடையீர்" என்னும் அதன்உரையையும் நோக்குக. "புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்" | |
என்றதற் கேற்ப, "எழுத்தெனப் படுப .................. முப்பஃ தென்ப" | (தொல்.1) |
என்று எழுத்ததிகாரத்தையும், "உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே அஃறிணை யென்மனார் அவரல பிறவே" | (தொல்.484) |
என்று சொல்லதிகாரத்தையும், "கைக்கிளைமுதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை யென்ப" | (தொல்.947) |
என்று பொருளதிகாரத்தையும்,அதனுள்ளும், "அகத்திணை மருங்கின் அரில்தப வுணர்ந்தோர் புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின்" | (தொல்.1002) |
என்று புறத்திணை யியலையும், "பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் கண்ணிய புறனே நால்நான் கென்ப" | (தொல்.1195) |
என்று மெய்ப்பாட்டியலையும், "நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே" | (தொல்.1259) |
என்று செய்யுளியலையும்தொடங்கியதுடன், இடையிடை நெடு கலும்"என்மனார் புலவர்", "நுண்ணிதின்உணர்ந்தோர்", "மொழிப", "என்றிசினோரே" என்றும் பிறவாறும் முன்னூலாரைப்பன்மையிற் சுட்டி, இறுதியில் நூலையும் "நுனித்தகுபுலவர் கூறிய நூலே" என்று தொல்காப்பியனார்முடித்திருப்பதால், ஒரோவிடத்துள்ள ஒருசில ஆரியக்கருத்துகள் தவிர ஏனைய இலக்கணச் செய்திகளெல்லாம், முந்து நூல்களிற் கண்டவையே என்பதுதெளிவாகும். தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ள (அகமும் புறமும்
|