பக்கம் எண் :

112திரவிடத்தாய்

திரவிடத்தாய்

தானு களுவ ஆண்ட ஊரு களுவெகெ = தான் கள்ளனானால் ஊருங் கள்வனாம்.
 
தான் திருடி அசலை நம்பான் (தமிழ்).
 
பஜெ இத்தினாது காரு நீனொடு = பாயிருக்கிற அளவு கால் நீட்டவேண்டும்.
 
பல்லடு குள்ளுது பரண்டு பத்தியெ = பள்ளத்திற் குந்திக் குட்டி (அரை)த் தவளையைப் பிடித்தான். பறழ் - பரண்டு (?).
 
மல்ல புதெ மெல்ல ஜாவொடு = மல்ல (பெரிய) பொதியை மெல்ல இறக்கவேண்டும்.
 
தன தரெகு தன கை - தன்கையே தனக்குதவி (தமிழ்).
 
காலொகு தக்க கோல, தேசொகு தக்க பாஷெ, தாளொகு தக்க மேள = காலத்துக்குத் தக்க கோலம், தேசத்துக்குத் தக்க பாசை, தாளத்துக்குத் தக்க மேளம்.
 
ஆண்டெதபாயி கட்டொலி தூண்டெத பாயிகட்டேல்யா? = அண்டாவாயைக் கட்டலாம் தொண்டை வாயைக் கட்டலாமா?
 
'உலைவாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது' (தமிழ்).
 
காடு சொர்க்கினவுளு ஏடுனு புடொடு, ஊரு சொர்க கினவுளு கொங்கணனு புடொடு = காடுசொக்கினவுழி (தழைத்தவிடத்து) ஆட்டை விடவேண்டும். ஊர்சொக்கின வழி கொங்கணனை விட வேண்டும். சொக்குதல் : அழகாயிருத்தல், மயக்குதல்.
 
நலிபெரெ திரியந்தினாயகு ஜாலு வோரெகெ = நடஞ் செய்யத் தெரியாதவனுக்கு நிலஞ் சமனில்லை.
 
ஆடமாட்டாத தேவடியாள் கூடங் கோணல் என்றாளாம் (தமிழ்).
 
நாயித பீல வோண்டெடு பாடுண்ட சம ஆவா? = நாயின் வாலைக் குழாய்க்குள் விட்டாலும் சமமாகுமா?
 
நாயின் வாலை மட்டைவைத்துக் கட்டினாலும் நேராகுமா? (தமிழ்)
 
பிஜினுகு தாயெகு கர்பத பேலெ? = எறும்புக்கு எதற்கு இரும்பு வேலை?