பக்கம் எண் :

கன்னடம்59

திரவிடத்தாய்

வடக்குமாக" வுள்ள கொங்கண தேசம் பண்டைக் காலத்தில் கொடுந்தமிழ நாடுகளுன் ஒன்றாயிருந்ததாக இலக்கண நூல்கள் கூறும்.
 
 
 
"கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
எல்லையின் புறத்தவும் ஈழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபால் இருபுறச் சையத்
துடனுறைபு பழகுந் தமிழ்திரி நிலங்களும்
முடியுடை மூவரும் இடுநில வாட்சி
அரசு மேம்பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரும் உடனிருப் பிருவரும் படைத்த
பன்னிரு திசையில் சொன்னய முடையவும்"
 
 
 
என்றார் அகத்தியனார்" என்பது நன்னூல் மயிலைநாதர் உரை. (ப. 161). இவ் அகத்திய நூற்பாவிற் கூறப்படும் பெயர்கள் முதலாவது நாட்டைக் குறித்தவை யென்றும் பின்பு மொழி திரிந்தபின் மொழியைக் குறித்தனவென்றும் அறிதல் வேண்டும்.
 
சேரநாடு கடைக்கழகக் காலத்திலேயே குட (மேற்குத் தொடர்ச்சி) மலைக்கு மேற்பால் வேறும் கீழ்ப்பால் வேறுமாகப் பிரிந்து போயிற்று. கீழ்ப்பால் நாடு மீண்டும் தெற்கில் கொங்கு நாடும் வடக்கில் கங்கநாடும் இடையில் அதிகைநாடு துவரை நாடு முதலியனவுமாகப் பிரிந்துவிட்டது. அதிகைநாடு தகடூரை (இற்றைத் தர்மபுரியை)த் தலைநகராகக் கொண்டு அதிகமான் மரபினர் ஆண்டு வந்தது. கங்கநாடு, அதன் வடக்கில் கங்க மரபினர் குவளாலபுரத்தை (கோலார்)த் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தது. இது கங்கபாடி என்று கல்வெட்டுகளிற் கூறப்படும்.
 
 
 
"வெங்கை நாடுங் கங்க பாடியும்"
(S.S.I.I. 94)
 
 
 
கங்க மரபினரான சிற்றரசர் கடைக்கழகக் காலத்திலே, மறத்திற் சிறந்து பெயர் பெற்றவராயிருந்தனர்.
 
 
 
"நன்ன னேற்றை றறும்பூ ணத்தி
துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி"
(அகம். 44)
 
 
 
 
 
"பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்"
(சிலப். 25 : 157)
 
 
 
எனப் பழைய நூல்கள் கூறுதல் காண்க.