சமற்கிருதவாக்கம் - எழுத்து | 121 |
14
14
சமற்கிருதவாக்கம்-எழுத்து
தமிழெழுத்து
எழுத்து, ஒலியும் வரியும் என இருவடிவுடையது. இவற்றுள் உண்மை யானது ஒலியே. ஒலியே எழுதப்படுதலின்
எழுத்தெனப்பட்டது. உள்ளத்தி லெழும் கருத்துகளை நேரடியாய் அறிவிக்கும் குறி ஒலி. செவிப்புலனான
ஒலியைக் கட்புலனாக்கும் குறியே வரி.
முழுகிப்போன குமரிக்கண்டத்தில், கி. மு. ஐம்பதினாயிரம் ஆண்டு கட்கு முன்பே தமிழ் தானே தோன்றி,
1) அசை நிலை
(Monosyllabic Stage),
2) கூட்டு நிலை
(Compounding Stage),
3) பகு சொன்னிலை (Inflexional
Stage),
4) கொளுவு நிலை
(Agglutinative Stage),
என்னும் நால்வகை மொழி நிலையுங் கடந்து முழு வளர்ச்சியடைந்து, கி.மு. பத்தாயிரம் ஆண்டுகட்கு
முன்பே எழுத்தும் இலக்கியமும் இலக்கணமும் நிரம்பப்பெற்று, முதன் முதலாகத் தென்மதுரைத் தலைக்கழகத்தில்
ஆராயப்பெற்றது.
தமிழொலிகள் பெரும்பாலும் இயற்கையானவை; எளியவை; எல்லா மொழிகட்கும் பொதுவானவை.
பொதுவாக, எழுத்தொலிகள் தெற்கே செல்லச் செல்லத் தொகையிலும் வன்மையிலும் குறைந்தும், வடக்கே
செல்லச் செல்ல அவற்றில் மிகுந்தும் உள்ளன. தமிழ் வல்லின வொலிகள் வடமொழி வல்லின
வொலிகளை நோக்க மெல்லியவை. இவற்றுள், முன்னவை இரட்டித்தாலன்றிப் பின்னவற்றை வன்மையில்
ஒவ்வா. இந் நிலைமையை இற்றைத் தென்பாண்டி நாட்டுப்புறப் பழங்குடி மக்களின் நாவில்தான் செவ்வையாகக்
காணமுடியும்.
1) படவெழுத்து
(Pictogram or Hieroglyph),
2) கருத்தெழுத்து (Ideogram),
3) அசையெழுத்து
(Syllabary),
4) ஒலியெழுத்து
(Phonemic
Character),
|
|
|