பக்கம் எண் :

சமற்கிருதவாக்கம் - இலக்கணம்127

15

15

சமற்கிருதவாக்கம் - இலக்கணம்

    இலக்கணம் இலக்கியம் என்னும் இரண்டனுள் முந்தியது இலக்கியமே.

    "இலக்கிய மின்றி இலக்கண மின்றே
    எள்ளின் றாகில் எண்ணெயு மின்றே
    எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல
    இலக்கி யத்தினின் றெடுபடும் இலக்கணம்"

என்பது பேரகத்தியத்தைச் சேர்ந்ததாகக் காட்டப்பெறும் ஒரு பழைய மேற்கோள் நூற்பா.

    இலக்கியம் என்னும் சொல்லில், 'இலக்கு' முதனிலை; 'இயம்' ஈறு. இலக்கு = குறி, குறிக்கோள். ஒரு குறித்த இடத்தை இலக்கு என்பர் நெல்லை நாட்டார். வாழ்க்கையின் சிறந்த குறிக்கோளை எடுத்துக்காட்டும் நூலே இலக்கியம்.

 

"அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்  
உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்
ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூஉம்"

 

 

(சிலப். பதிகம்.)

    நாட்டி, அரசியல் பிழையாமை, கற்புடையாளைப் போற்றுதல், தீ வினை செய்யாமை ஆகிய முக்குறிக்கோளை எடுத்துக் காட்டுவதே சிலப்பதிகாரத் தின் நோக்கமாயிருத்தல் காண்க.

    ஆகவே, இலக்கைக் காட்டுவது இலக்கியம். அதுவும், சிறந்த அறிஞனால் செய்யப் பெறுவதால், அதன் நடையும் சிறந்ததாய் இருத்தல் வேண்டும். ஒரு மொழியில் உயர்ந்தோர் கையாளும் நடையைப் பிறரும் பின்பற்றுமாறு எடுத்துக்காட்டுவதே இலக்கண நூலின் நோக்கம். ஆகவே, இலக்கணமும் ஒன்றைக் குறியாக அல்லது குறிக்கோளாகக் கொண்டதே. இலக்கணம் என்னும் சொல்லில், 'இலக்கு' முதனிலை; 'அணம்' ஈறு.

 

"உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலன்எனக்
கொள்ளும் என்ப குறியறிந் தோரே" 

 

(993)

என்னும் தொல்காப்பிய நூற்பாவில், இலக்கணம் குறி என்றே பெயர் பெற்றிருத்தலை நோக்குக. இலக்கணம் இலக்கியம் இரண்டும் மொழி