வர்ணம்-வரணி;
வர்ணி = வண்ணி -வருணி.
வர்ணித்தல் = 1. வரைதல்.
2. வரைதல்போலச் சிறப்பித்துக் கூறுதல்.
செய்யுளும் சித்திரமும் ஒரு பொருளின் வடிவைக் காட்டுவதில் ஒன்றுக்கொன் றினமாகும்.
முன்னது அகக்கண்ணுக்கும் பின்னது புறக்கண்ணுக்கும் புலனாம்.
இதுகாறும் கூறியவாற்றால், எத்தனையோ தென்சொற்கள் வட மொழிச் சென்றுள்ளன வென்றும்,
அவை விழிப்பத் தோன்றாவிடினும் ஆராயத் தோன்றும் எனவும், அறிந்துகொள்க.
- "செந்தமிழ்ச்
செல்வி" சுறவம் 1935