படுதல் = படிதல் =
i. வீழ்தல். ii. ஒலித்தல்.
வீழ்தற்பொருளின்
அடிப்படையாகப் படி என்பதனின்றும் பல கருத்துகளும் சொற்களும் பிறக்கும்.
படிதல் = 1.
விழுதல்: கீழ்த்தங்கல், நிலைபெறுதல், பழகுதல்,
பேசி முடிவாதல்.
(எ-டு.) விலை படிந்தது.
2. விழுதல்.
-ஒருவரின் அடிவணங்கல், அடிப்படுதல், கீழ்ப்படிதல், தாழ்மையாயிருத்தல்.
3. விழுதல்:
சாய்ந்து அல்லது மடங்கி விழுதல், நிலத்தில் அல்லது உடம்பிற் படுதல்.