|
பிற்பட்டதுதான் பாபிலோனிய
நாகரிகம். இவற்றுள் இந்தச் சுமேரிய
நாகரிகத்திற்கு எழுத்துச் சான்று
மிகுதியாயிருக்கின்றதென்று காட்டுகின் றார்கள்.
அந் நாகரிகத்தை கி.மு. 3500-லிருந்து
தொடங்குகிறார்கள். அதற்கடுத்தது பாபிலோனிய
நாகரிகம். ஆனால் தமிழர் நாகரிகமோ மிக மிக
முந்தியது. தலைக் கழகக் காலமெல்லாம் கி. மு.
10,000-க்கு முந்தியது. தமிழ்மொழி தோன்றியதோ
அதற்கும் முந்தியது. இப்பொழுது எழுத்தைச்
சார்பாகக் கொண்டு தமிழைக் கவிழ்க்கப்
பார்க்கிறார்கள் பகைவர்கள்.
நீங்கள் இன்னொன்றை அறிந்து கொள்ள
வேண்டும். இலக்கணத் திற்கு முந்தியது இலக்கியம்.
இலக்கியம் இருகூறானது. எழுதப்பெற்ற இலக்கியம்;
எழுதப் பெறாத இலக்கியம். இவற்றுள் எழுதப் பெற்ற
இலக்கியத்திற்கு முந்தியது எழுதப் பெறாத
இலக்கியம். அதற்கு முந்தியது மொழி. மொழி
வளர்ச்சியோ ஆறு ஏழு நிலைகளைக் கொண்டது. இந்த
மொழி நிலைக்குப் பிற்பட்டதே எழுத்து. அந்த
எழுத்து நிலையிலும் நான்கு வகைகள் சொல்லப்
பெறுகின்றன. அந்த நான்கு வகைகளுள் சிறந்ததும்
இறுதியுமான நிலையைத் தமிழ் தலைக்கழகக்
காலத்திலேயே அடைந்து விட்டது. மேலே ஐரோப்பிய
மொழிகளை நீங்கள் பார்ப்பீர்களானால் எந்த
மொழியிலும் உயிர்மெய் எழுத்து இல்லவே இல்லை.
அதில் உயிர்மெய் உயிர்முன்னும் மெய்பின்னும்
என்றில்லாதபடி உயிரொடு மெய்யும் மெய்யோடு
உயிரும் கலந்தே இருக்கும். எல்லாம் Alphabet
என்று சொல்லிக் கொள்வார்கள்; அவ்வளவுதான்.
அல்ஃபா (Alpha)
பீட்டா (Beta)
என்று சொல்வார்கள் அல்ஃபா, பீட்டா என்று இரண்டு
எழுத்துகள் முன்னாலே தோன்றிய தாலே அவ்வாறு
சொல்லிக் கொள்வார்கள். அஃது எதைப்போல்
என்றால், நம்மவர்கள் "அ"னா "ஆ"வன்னா
தெரியாதவன்" என்று சொல்வதைப்போல். அ, ஆ
என்பதைப் போல் அவர்கள் அல்ஃபா (A)
பீட்டா (B)
என்பார்கள். ஆனால் தமிழ் எழுத்துகள் எப்படி
என்றால் உயிரும் மெய்யும் மட்டுமல்ல;
உயிர்மெய்யும் தோன்றியது. அஃது ஏன் அவ்வாறு
தோற்றினார்கள் என்றால், நம் பழைய
இலக்கணவாசிரியர்கள் எல்லாரும் முற்றும் துறந்த
முனிவர்கள்; சிறந்த மெய்யறிவுள்ள, கொண் முடிபுப்
பேரறிஞர்கள். அஃதாவது "தத்துவ ஞானிகள்". அவர்கள்
மூன்று வகையான பொருள்களை இவ்வுலகத்திலே
கண்டார்கள். உயிர், உயிரில்லாத பொருள்கள்,
உயிரும் மெய்யும் கூடிய பொருள்கள். ஓரறிவுயிர்
முதல் ஆறறிவுயிர்கள் ஈறாக உள்ள அனைத்தும்
நிலைத்திணை முதல் மாந்தன் ஈறாக உள்ள அறுவகைப்
பட்ட உயிர்மெய்கள். எனவே தாம் கண்ட
எழுத்துகளுக்கும் உவமை முறையிலே உயிர் என்றும்,
மெய் என்றும், உயிர்மெய் என்றும்
பெயர்களிட்டார்கள். தானே ஒலிப்பது உயிர்;
உயிரின்றி இயங்காத எழுத்து மெய்; உடம்பு
போன்றது; இரண்டும் கலந்தது உயிர்மெய். இந்த
வகைகளைக்கூட முறையாக வைத்திருக்கின்றார்கள்.
முதன் முதல் ஓர் ஆளைப் பார்த்தவுடன் நமக்கு உயிர்
தெரிவதில்லை. உடம்புதான் விளங்கித்
|