பக்கம் எண் :

64பாவாணர் உரைகள்

தெரியும். க என்று சொன்னால் க்+அ. இந்த உயிர்மெய் உண்மை எல்லா மொழிகளிலும் உண்டு. Cat (கேட்) என்று சி, ஏ, டி என்று பிரித்துச் சொன்னாலும் "கேட்" என்று தானே (முதலில் "க்"கைத்தானே) சொல்லல் வேண்டும். King என்பதை, K, I, N, G என்று பிரித்துச் சொன்னாலும் "கிங்" என்று உயிர்மெய் முன்னால் வரும்படி தானே சொல்ல வேண்டும். க், ஐ, ங், கு-என்றா சொல்லிக் கொண்டிருக்கிறான்? K, I, சேர்ந்தாலே "கி" என்றுதானே உயிர்மெய் வருகின்றது. ஆனால் அதை அவன் கண்டு பிடிக்கவில்லை. அந்த மெய்யும் உயிரும் சேர்ந்து ஒன்று போல் ஒலிக்கின்றது என்பதை அவன் பிரித்து உணரவில்லை. அவர்களைப் போலன்றி நம் முன்னோர்கள் சிறந்த மெய்ப் பொருள் அறிஞர்களாயிருந்ததாலே அதற்கு உயிர்மெய் என்று பெயரிட்டார்கள். இந்த உயிர்மெய் அமைப்பினாலே எழுத்துத் தொகை நீண்டு விடுகிறது. ஆகையினால் இதற்கு நெடுங்கணக்கு என்று பெயரிட்டார்கள். அந்த உயிரும் மெய்யும் மட்டும் பிரித்துச் சொல்வதைக் குறுங்கணக்கு என்றார்கள். மேலை மொழிகளில் இந்தப் பாகுபாடு இல்லவே இல்லை; நீங்கள் எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் சரி. இந்த முறை தமிழிலேதான் தோன்றியது. ஆனால் இப்பொழுது சொல்லப் படுவது என்ன? முதன் முதலில் இம் முறை சமசுக்கிருதத்தில்தான் தோன்றியது. சமசுக்கிருதத்தைப் பின்பற்றித் தமிழில் இதை வகுத்துக் கொண்டார்கள்" - என்று சொல்கிறார்கள்.

"உரத்தியும், எடுத்தும், கனைத்தும் க (K), க (G), கஹ (Kgh) என்னும் இம்மூவகை ஒலிகளையும் விட்டுவிட்டுப் பொது வகையான ஒலிகளைத் தமிழர்கள் எடுத்துக்கொண்டார்கள்" என்று ஒரு தவறான கருத்தைச் சொல்கிறார்கள். கால்டுவெல்லே இந்தக் கருத்தைத் தோற்று வித்து விட்டார். அஃது எதனாலே என்றால் இந்த வரலாறு தெரியாமை யாலே! "தமிழ் குமரி நாட்டில் தோன்றியது; அது மற்ற மொழிகளுக் கெல்லாம் முந்தியது; என்னும் உண்மையை அவர் அறியாததாலேயே! எனவேதான் இந்தக் குமரி நாட்டு உண்மையை அடிப்படையாக நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். இதற்குப் பின்னால் வேறு போராட்டங்கள் வரும். இந்த உண்மையை நாம் நன்றாக, அழுத்தந் திருத்தமாக, உறுதியாக உள்ளத்திலே கொள்ள வேண்டும். முதன் முதலாக இந்த நெடுங்கணக்கு தோன்றியது தமிழில்தான். அதற்குப் பின்பு திரவிட மொழிகளிலும், அதன்பின் வடநாட்டு மொழிகளிலும் தோன்றியது. இந்த முறையைத்தான் சமசுக்கிருதம் பின்பற்றியிருக்கிறது.

எழுத்து, மொழிக்குப் பிற்பட்டது. மிகப் பழைய காலத்திலேயே தமிழில் எழுத்து தோன்றி விட்டது. ஆனால் வடக்கேயிருந்து வந்த சமணர்கள் சிலரும் பௌத்தர்களும் அந்தக் காலத்திலே வடக்கே வழங்கிய பிராமி எழுத்தைத் தென்னாட்டிலே தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தார்கள். அவற்றில் கல்வெட்டுகள் மதுரையருகிலும் கிடைக்கின்றன. நம்