பக்கம் எண் :

88பாவாணர் உரைகள்

உர் - உல் - உறு உர் - ஊர்

உல் என்பது உறு என்று இப்போது வழங்குகிறது.

வல்லினத்திலே உகரம் சேர்ந்த றகரம். பழைய காலத்திலே

உர் என்றுதான் இருந்தது. (உர் - உறு, உர் - ஊர்)

உர் - உறு என்றால் பொருந்து என்று பொருள் அவ்வளவுதான். அது வல்லினமாகத் திரியும்பொழுது வல்லினமெய்யாகத் தமிழிலே வழங்காமையினாலே உகரம் சேர்ந்து உறு என்று வருகிறது.

உறுதல் என்றால் பொருந்துதல் அவ்வளவுதான்.

அதேதான் உர் என்பதற்கும்.

மொத்த ஐந்திணை நிலங்களிலும் மக்கள் நிலைத்து வாழ மாட்டார்கள் பெரும்பாலும். நாடோடிகளாக இருப்பார்கள். இந்த மருத நிலத்திலேதான் மக்கள் நிலைத்து வாழ்வார்கள். அதனாலே முதன் முதலாக நகரிகம் என்ற சொல்லிலிருந்துதான் நாகரிகம் என்று வருகிறது.

(நகர் - நகரகம் - நகரிகம் - நாகரிகம்)

நகரத்திலேதான் மக்கள் திருந்தியிருப்பார்கள். இலத்தீனில்கூட Civilization என்பது Civilor - நகரத்தின் பெயரிலிருந்துதான் வருகிறது. இந்த ஊர் என்கிறதும் அப்படித்தான். முதற்காலத்திலே பார்த்தாலும் மருதநிலத்து ஊரைத்தான் குறித்தது. இப்பொழுது, நாம் யாரைப் பார்த்தாலும் "எந்த ஊரப்பா? உனக்கு?", "யாரய்யா? உங்கள் ஊர் என்ன," என்று கேட்கிறோம். அந்தக் காலத்திலே எப்படி வழங்கினது என்றால் "என்னய்யா? எந்த ஊர்? எந்தப்பாடி?" என்றுதான் கேட் பார்கள். பாடி அல்லது சேரி என்று இருந்தால் முல்லை நிலத்து ஊராக இருக்க வேண்டும். வேறு "துறை" அல்லது "பாக்கம்" என்பது நகரம் உண்டான பிற்பாடு ஏற்பட்டது. துறை என்பது காயல் என்பது போல இருந்தால் அது நெய்தல் நிலந்தான் என்பதைக் குறிக்கும். இப்படி இந்த ஊர் என்ற சொல் கிறித்துவிற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே (B.C. 3000) அப்பொழுதுதான் அந்த ஊர் என்ற பெயர் ஏற்பட்டது. அந்த ஊரிலேதான் ஆபிரகாம் என்ற ஒரு பெருந்தலைவன் இருந்தான். ஆப்ரகாம் (Abraham) என்று இருந்தாலும் சரி.

முதல் சொல் ஆப் (Ab). ஆப் என்றால் அப்பன்.

இன்றைக்கும் அரபியிலும் அப்பன் என்பது ஆப் என்றுதான் குறிக்கப்படுகிறது. இந்த அப்பன், அம்மன் அம்மை இந்த இரு சொற்களும் உலகத்திலே ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் வழங்கு கின்றன. இந்த ஒன்றே போதுமானது தமிழ் உலக முதன்மொழி என்ப தற்கு. அப்பன், அந்த ஆப் (Ab) அரபியிலும் ஆப் என்றுதான் இருக்கிறது. அம்மையை ஆம் - உம் என்றும் சொல்வார்கள். இதோடு நான் நிறுத்தி விடுகிறேன்.