"காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன் நாமங் கெடக்கெடும் நோய்."(குறள். 360) "நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்."(குறள். 605) என்னும் குறள்களை நோக்குக. பிற்காலத்தில், அச் சொல் காதல் என்னும் சொற்போல் ஆடவரின் பெண்ணாசையையும் பெண்டிரின் ஆணாசையையும் சிறப்பாய்க் குறிக்கலாயிற்று. அப் பொருளிலும், உயரிய இருதலைக் காமத்தையும் ஒருமனை மணத்தையுமே குறிக்க அது திருவள்ளுவரால் ஆளப்பெற்றது. ஆயின், இன்று, அது இடங்கழியையும் இணைவிழைச்சு விருப்பத்தை யுமே குறிக்குமளவு இழிபடைந்துள்ளது. காமம்-காமன்=மணக்காதல் உண்டாக்கும் தெய்வம், The Indian Cupid. காமன்-Skt. Kama (காம). - "செந்தமிழ்ச் செல்வி" திசம்பர் 1966 |