பக்கம் எண் :

சொற்பொரு ளாராய்ச்சி 59

     ஏராளம்:ஏர் = கலப்பை. ஆள் + அம் = ஆளம் = ஆளின் தன்மை.
ஏராளம் = உழவன் வருவாய்போல் மிகுதியாயிருத்தல். உழவன் நேரடியாயும்
மிகுதியாயும் உணவுப்பொருளை விளைவித்தலின் பொருள் மிகுதி
ஏராளமெனப்பட்டது. அம் மிகுதியினாலேயே உழவன் வேளாண்மை செய்து
வேளாளனாயினன். ஒள'வேளாள னென்பான் விருந்திருக்க உண்ணாதான்".
(திரிகடு. 12)

     தாராளம்:தார் = சேனை. ஆளம் = தன்மை. தாராளம் = படைமறவர்
போல், விருப்பம் போலப் பிறர் பொருளைக் கையாடுதல் அல்லது வழங்கல்.
இன்றும் படைமறவர் பிறர்பொருளை மனம்போற் பயன் படுத்தலும்
கொள்ளை யடித்தலும் காண்க.

     சிங்கியடித்தல்:சிங்கி = தாளம். அடித்தல் = தட்டுதல். சிங்கி
யடித்தல் = இரப்போன் தாளம் தட்டி இரப்பதுபோல் திண்டாடுதல்.

     தாளக்கருவியை உருவக(ரூபக) தாளத்தில் தட்டினால் சிங்சீயான் என்ற
ஒலியெழும். இதனால், தாளக்கருவிக்குச் சிங்கியென்றும் சீயான் என்றும்
இருபெயருண்டு.

     தாயமாடல்:தாய் + அம் = தாயம் = தாயினின்று பெறும் உரிமை.
ஆடல் = விளையாடல். தாயமாடல் = சீட்டுப் போடுவதுபோல் முத்தும்
பலகறையும் போட்டு உடன்பிறந்தார் பாகம் பிரித்தல்; முத்தினாலும்
பலகறையாலும் விளையாடிப் பிறர் உரிமையைப் பெறுதல் அல்லது பறித்தல்;
தாயமாடிக் காலத்தை வீண்போக்குவதுபோல் வேலை செய்யாமற் காலங்
கழித்தல் அல்லது தாழ்த்தல்; ஒளவேலை தாயமாடுகிறதுக என்னும் வழக்கை
நோக்குக.

     மினுக்கிடுதல்:> மினக்கிடுதல் > மெனக்கிடுதல், மினுக்கிடுதல் =
அலங்கரித்தல். அலங்காரத்திலேயே கருத்தாயிருந்து வேலையைக் கை
நெகிழவிடல். ஒளவேலை மினக்கிடுதல்க என்னும் வழக்கையும்
ஒளதேவடியாள் சிங்காரிக்குமுன் தேர் நிலைக்கு வந்துவிட்டதுக என்னும்
பழமொழியையும் நோக்குக.

                               "செந்தமிழ்ச் செல்வி" சுறவம் 1943