| ண கரம், ரகரம், ழகரம் என்று கூறுவதில் கரம் என்பது சாரியை. (இங்குச்சாரியையாவது ஒரு பொருளில்லாது எழுத்துகளை எளிதா யுச்சரித்திற்குக் கூட்டப்படும் அசை அல்லது ஒலி.) இவற்றை, ண, ர, ழ, என்று சாரியை யின்றியுங் கூறலாம். ணகரம் என்பது ண் என்னும் மெய்யெழுத்தையாவது, ண என்னும் உயிர்மெய்யெழுத்தையாவது, ண முதல் ணௌ வரையுள்ள பன்னீருயிர் மெய்யெழுத்துகளில் ஏதேனு மொன்றையாவது, அவையெல்லாவற்றையும் தொகுதியாகவாவது இடத்திற் கேற்ப உணர்த்தும். ஆனால் ‘ணகரமெய்’ என்பது ண் என்னும் மெய்யை மட்டும் குறிக்கும். இங்ஙனமே பிறவும். குறிப்பு: ஆசிரியர் மாணவரை எல்லா எழுத்துகளையுஞ் செவ்வையாய் உச்சரிக்கப் பயிற்றல் வெண்டும். மாணவர் குறில் நெடில்களை மாத்திரை வேறுபாடில்லாமலும், இனவெழுத்துகளை ஒலி வேறுபாடில்லாமலும் உச்சரிப்பது வழக்கம். அவர் தாம் தவறாய் உச்சரிப்பது போன்று எழுதுவதினாலேயே பெரும்பாலும் எழுத்துப் பிழைகள் நேர்கின்றன. ஆகையால் கீழ்வகுப்பிலிருந்தே ஆசிரியர் அதைத் திருத்தல் வேண்டும். சில ஆங்கிலவழித் தமிழறிஞர் ஆங்கிலத்திலுள்ள t போல ஒன்றுபட்டொலிக்கும் றகர விரட்டையைப் பிளவுபடத் திரித்துச்சரிப்பர். அது தவறு. உ-ம். | சொல் | பிழை | திருத்தம் | | வெற்றி | Vetri | Vetti | றகரம் னகர மெய்க்குப்பின் வரும்போது candle என்னும் ஆங்கிலச் சொல்லிலுள்ள d ஒத்தொலிக்கும். உ-ம். கன்று - kandu 3. ரகர றகர பேதம் ரகரம் வருமிடங்கள் : வடசொற்களும் திசைச்சொற்களும் வடசொற்களிலும் திசைச்சொற்களிலும் வருவது இடையின ரகரம். றகரம் தமிழ்க்கே சிறப்பெழுத்தாதலின், பிறமொழிச் சொற்களில் வருபவை பெரும்பாலும் இடையின ரகரமே. கிறிஸ்து, சீறாப்புராணம், உமறுப்புலவர் என்னும் சில திசைச்சொற்களில் மட்டும் வல்லின றகரம் வைத்தெழுதப்படும். பிற திசைச் சொற்களிலெல்லாம் அது வழுவாகும். உ-ம்: | பிழை | திருத்தம் | பிழை | திருத்தம் | | றாமசாமி(வ) | இராமசாமி | உறுமால் (இந்.) | உருமால் | | பிறாமணன(வ) | பிராமணன் | குறுமா (இந்.) | குருமா | | அபறாதம்(வ) | அபராதம் | | | |