|
றாமைப் பண்பைத் தெற்றெனக் காட்டும். அதனால், அவர்
ஒருகால் சத்தியபுத்திரா என்று அசோகன் கல்வெட்டுகளிற் குறிக்கப்பட்டிருக்கலாம்.
சொற்றவறாமை என்பது, வாய்நேர்ந்த உதவியைச் செய்யும் அறப் பண்புக்கும் வஞ்சினத்தை
நிறைவேற்றும் மறப்பண்புக்கும் பொதுவாம்.
கடைக்கழகச் செய்யுள்கள் கோசரை வம்ப மள்ளர் என்று
குறியாமையின், அசோகன் காலத்திலும் அவர் குடியூன்றிய ஒரு தமிழக மறவர் வகுப்பினரா
யிருந்திருக்கலாம்.
'துனைகா லன்ன புனைதேர்க் கோசர் தொன்மூ தாலத்
தரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை
சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப
மோரியர்' (அகம். 251)
என்னும்
அகநானூற்றுப் பகுதியும் இதை ஒருவாறுணர்த்தும்.
ஐம்பெரு வேளிருட் சிலர், ஒரோவிடத்துத் தமக்கு
ஆற்றல் விஞ்சிய போது வேந்தர் ஒருவரையும் பலரையும் எதிர்த்தாரேனும் தமிழகம்
தொன்றுதொட்டுத் தொல்காப்பியர் காலம்வரை மூவேந்தராட்சிக்குட்பட்டே
யிருந்துவந்ததென்பது,
'வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்' (செய்.
78)
என்னும் தொல்காப்பிய அடியால் விளங்கும்.
அசோகன் காலத்தில் அதிகமான் கை தமிழகத்தில்
ஓங்கியிருந்த தென்பதற்கு யாதொரு சான்றுமில்லை.
இற்றைத் தமிழ்ப் புலவியத்துள் தொல்காப்பியமே
முதற் பொத்தகமா யிருத்தல் பற்றி, ஆராய்ச்சியில்லாரெல்லாரும் அதுவே முதல் தமிழ்நூல்
என மயங்கிக் கொண்டிருக்கின்றனர். வையாபுரியாரோ வெனின், அதையும் பாணினீயத்தின்
வழிநூலாகக் காட்டி வருகின்றனர்.
தொல்காப்பியம் படுகுழிகளும் கவர்நெறிகளும்
நிறைந்தது. ஆதலால், மாந்தன் வரலாற்றாராய்ச்சியும் மொழிவரலாற்றாராய்ச்சியும்
தமிழ் வேர்ச்சொல்லாராய்ச்சியும் இல்லாதவர், கி.மு.1200 போல் தோன்றிய
இலக்கியத் திரிமொழியாகிய சமற்கிருத அறிவைக்கொண்டு, கி.மு. நூறாயிரம் ஆண்டுகட்கு
முன் குமரிநாட்டில் தோன்றிய மாந்தன் முதன் மொழியாகிய தமிழியல்பை அறியப் புகுவது,
நாழிகொண்டு ஆழியை அளந்தறியத் துணிவதே யொக்கும்.
அசோகன் கல்வெட்டுச் செய்திகளாற் கவரப்பட்ட
தமிழகப் பொது மக்கள், அவற்றைத் தாமே படித்தறிய வேண்டுமென்னும் அவாவினால்
உந்தப்பட்டு, அவற்றின் பிராமியெழுத்தைப் பயின்றுகொண்டன
ரென்றும். |