பக்கம் எண் :

112மறுப்புரை மாண்பு

-112-

7. தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி

 

    ஒலிக்குறுக்க நீட்டமும் சொன்னிலைக் குரியவாதலின், அவற்றை மொழி மரபிற் கூறினார். ஆதலால், மகரக் குறுக்கமும் ஐகாரக் குறுக்கமும் கூறுவதற்கு மொழிமரபே தக்க இயலாம்.

    'ஆ ஈ  ஊ ஏ  ஐ ஓ ஒளஎனும்
    அப்பால் ஏழும்
    ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப.'                      (4)

    'அகர இகரம் ஐகாரமாகும்.'                             (54)

    'அகர உகரம் ஒளகாரமாகும்'                            (55)

என்று தொல்காப்பியம் கூறுவதால், ஐகார ஒளகாரங்கள் தனிநிலையில் இன்றும் இருமாத்திரை நெடிலே.

    'ஈரள பிசைக்கும் இறுதிஇல் உயிரே
     ........................
    குறிப்பின்  இசையான் நெறிப்படத் தோன்றும்'                (766)

என்பதனால்,

     'ஐவியப் பாகும்'                                        (868)

    என்னுமிடத்தும், ஐகாரம் இருமாத்திரை நெடிலேயாதல் வேண்டும்.
    இனி, ஐகார ஒளகாரம் சொல்லுறுப்பாக வந்து மாத்திரை  குறையினும், செய்யுளில் எதுகை நோக்கி அய், அவ் என வரிமாற்றத் தேவையில்லை.

    'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
     ஐயர் யாத்தனர் கரணம் என்ப'                             (1091)

என்னும் நூற்பாவில், ஐயர் என்னும் வடிவமே தொன்றுதொட்டு மூலத்திலும் உரையிலும் வழங்கிவருதல் காண்க.

கூற்று

    'யகரத்தின் மட்டிட்ட வழக்கு வேறோரிடத்திற் குறிக்கப்பட்டுள்ளது. சகரமெய் அகரத்தொடும் ஐகார ஒளகாரங்களோடும் கூடி வருவதில்லை. அகரத்தொடு வராமைக்குக்  காரணம், அண்ணமெய்யாகிய சகரத்தின் பின்வரும் அகரம் அண்ணவுயிராகிய எகரமாகத் திரிந்துவிடுவதே. இது தொல்காப்பியர் கால மொழிநிலையைக் குறிக்கின்றது. அந் நிலை பல சகர முதற்சொற்கள் வந்துள்ள கழக இலக்கியக் கால நிலையினின்று வேறு பட்டதாயிருத்தல் வேண்டும்.

மறுப்பு

    தொல்காப்பியர் காலத்திற் சகர முதற்சொல் ஒன்றேனும் தமிழில் வழங்கவில்லையென்பது சற்றும் பொருந்தாது. சக்கரம், சகடம் முதலிய ஒருசில (வடமொழி தென்மொழியாகிய) இருமொழிப் பொதுச் சொற்களை நீக்கினும், பெருவாரி உலக வழக்கும் இன்றியமையா அடிப்படையுமான