|
மாணவராதற்கும்
உரியவரல்லர் என்பது எனது ஆய்ந்த முடிபு. செயற்கை வல்லொலியெல்லாம் சிறந்து, பலுக்க
(உச்சரிக்க) அரிதான சொல்லமைப் பெல்லாம் பெற்று, ஆசியா, ஐரோப்பா ஆகிய இருபெருங்
கண்டங்கட்குப் பொதுவான சொற்களையெல்லாம் தழுவி, எண்ணரு நூற்றாண்டுகளாக
இடுகுறிமுறையில் வளம்படுத்தப்பட்ட வடமொழியை; இயல்பாயெழுந்து, எளியவொலி கொண்டு
இளஞ்சிறாரும் ஒலிக்கும் சொல்லமைப்புப் பெற்று, மாந்தன் தோன்றிய காலந்தொட்டு
மாண்பாக வளர்க்கப்பெற்ற தமிழுக்கு முந்தியதாகவும் மூலமாகவுங் காட்டத் துணிவார்;
மொழிநூற்றுறைகளில் முற்றத் துறைபோய முதுபெரும் புலவராகத் தம்மைத் தாமே மதித்துத்
தருக்கின், அவருக்கு விடையாக யானொன்றும் விடுத்தற்கில்லை.
இனி, என்
''சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளில்'' சாத்தியார் அவர்கள் குறிப்பிடாத இரண்டொரு
குற்றங்குறைகள் உள. அவை சொற்பொருள் பற்றியவை. அவற்றை அடுத்த பதிப்பில்
திருத்திக் கொள்வேன்.
- 'செந்தமிழ்ச் செல்வி' சூன்
1951 |