பக்கம் எண் :

குரலே சட்சம் 5

-5-

 

1. குரலே சட்சம்

 

    ஒரே கோவை (மேளம்) இசை வகையால், ஒன்றும் இடவகையால் ஒன்றுமாக இருவேறுபட்டு, குரலுக்குக் கூறியதை மத்திமத்திற்கும் மத்திமத்திற்குக் கூறியதைக் குரலுக்குமாக மயங்கக் கொண்டனர்.

    பண்ணுக்கேற்றபடி எந்தச் சுரத்தையுங் குரலாகக்கொண்டு வாசித்ததை, ஒளகுரல் குரலாயதுக, ''துத்தங் குரலாயது'', ''கைக்கிளை குரலாயது'' முதலிய தொடர்களாலுணர்க.

    (4) கூற்று:

    "இளி நரம்பிற்குப் `பட்டடை'' என ஒரு பெயருண்டு, ழுவண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்தாங்குழு (அரங்கேற்று காதை, 63) என்பதற்கு அடியார்க்குநல்லார் கூறும் உரையினை நோக்குக. `எல்லாப் பண்ணிற்கும் அடிமணையாதலின்க இளி இப் பெயர் பெற்றது. `ஷட்ஜம்'' என்னுஞ் சொல்லும் ஏனை ஆறு சுவரமும் பிறத்தற்கு இடமாகியது என்னும் பொருளினைத் தரும்.

    மறுப்பு: ச-ப என்னும் சுரப்பிடிப்பே பண்களுக்கெல்லாம் அடிப்படையாதலின், பஞ்சமம் (இளி) ''பட்டடை'' யென்றும், `வண்ணப் பட்டடைழு யென்றுங் கூறப்படுவதாயிற்று. பல பண்ணுச் சக்கரங்கள் ச-ப முறையில் இயங்குவதை அடியார்க்குநல்லா ருரையிலும் கருணாமிர்த சாகரத்திலுங் கண்டுகொள்க.

    "தாரத்துட் டோன்றும் உழைஉழை யுட்டோன்றும்
     ஓருங் குரல்குரலி லுட்டோன்றிச்...சேரும் இளி...."

என்றதும் இம் முறைபற்றியே.

    இனி, இதன் விரிவை, ஆபிரகாம் பண்டிதனார் மகனார் வரகுண பாண்டியனார் எழுதியுள்ள இசைத்தமிழ் விளக்கத்திற் கண்டு தெளிக.

    "காய்த லுவத்த லகற்றி யொருபொருட்கண்
     ஆய்தல் அறிவுடையார் கண்ணதே."

(இக் கட்டுரையிற் பெரும்பகுதி எனது ''இசைத்தமிழ்ச் சரித்திரம்'' என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.)

- "செந்தமிழ்ச் செல்வி" கடகம் 1943