பக்கம் எண் :

70மறுப்புரை மாண்பு

-70-

 

6. பேரா.தெ.பொ.மீ.தமிழுக்கதிகாரியா?

 

    சென்னைப் பல்கலைக் கழகம் தொகுத்துள்ள தமிழ் அகரமுதலி மறைமலையடிகள்போலும்) உண்மையான உரிமைத் தமிழறிஞரால் தொகுக்கப் பெற்றதன்று. அவ் வகரமுதலிக் குழு, அதன் பதிப்பாண்மைக் குழு முதலியவற்றின் உறுப்பினர் பெயரைக் கீழே குறிக்கின்றேன். நடுநிலைப் பகுத்தறிவாளர் பட்டிகளினின்று அறியத் தக்கவற்றை அறிந்துகொள்க.

தமிழ் அகரமுதலிக் குழு (The Tamil Lexicon Committee)
 
1. திருமான் (M.R.Ry.) (கே.வி.) கிருட்டிணசாமி அவர்கள்
  2.  '' (எசு. (S.) அனவரதவிநாயகம் அவர்கள்.
  3.  '' (ஏ.) சக்கரவர்த்தி அவர்கள்.
  4.  '' பெரும்பேராசிரியர் (மஹாமஹோபாத்யாய) கலை நாவல (வித்யாவாசஸ்பதி) பண்டித (எசு.) குப்புசாமி     அவர்கள்.
  5.  '' அராவ ஆண்டகை (ராவ் பஹதூர்) (ஏ.) இலக்குமண சாமி அவர்கள்.
  6. கனம் (Rev.) காடன் மத்தேயு.
  7. திருமான் பண்டித கா. நமச்சிவாயம் அவர்கள்.
  8.  '' அமைச்ச ஆண்டகை (திவான் பஹதூர்) (எசு.ஈ.) அரங்கநாதன் அவர்கள்.
  9.  '' அராவ ஆண்டகை (பி.) சம்பந்தம் அவர்கள்.
  10.  '' (தி. (T.) சிவராமசேது அவர்கள்.
  11.  ''  (சி.கே.) சுப்பிரமணியம் அவர்கள்.
  12.  '' பெரும் பேராசிரிய தென்கலைச்செல்வ (தாட்சிணாத்ய கலாநிதி) பண்டித வே.சாமிநாதர் அவர்கள்.
  13.  '' (டபிள்யூ எயிச்) வாரென் பெருமான் (Esg.)
  14.  '' (எசு.) வையாபுரி அவர்கள்.

    இப் பதினால்வருள், நால்வரே தமிழ்ப் புலவர். இருவர் ஒவ்வொரு சமயச் சார்பான தமிழறிஞரேயன்றி, இலக்கண விலக்கியம் முற்றக்  கற்றவரல்லர். இவ் வறுவருள்ளும், ஒருவரேனும் தனித்தமிழாற்றலும் உலக வழக்கறிவும் பிறரை மேற்கொள்ளும் நெஞ்சுரமும் உடையவரல்லர். பர்.சாமிநாதர் தமிழ் இலக்கியத்துக்கு ஈடும் எடுப்புமற்ற அதிகாரியரே; ஆயின், தமிழ்மொழிக்கல்லர்.

    கனம் காடன் மத்தேயுவும் வாரென் பெருமானும் மேனாட்டார். திருமான் (ஏ.) இலக்குமணசாமியார் தமிழறியாதவர்; தெலுங்கைத்  தாய் மொழியாகக் கொண்டவர்.