|
| வெஃகல் = 1. மிக விருப்பம் (பிங்.). 2. பேராசை (சது.). |
| வெஃகாமை=1. அவாவின்மை.2. பிறர் பொருளை வௌவக் கருதாமை. "வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்" (குறள். 178). | | வெள்-வெய்-வெய்யன் = விருப்பமுள்ளோன். "நல்லூரன் புதுவோர்ப் புணர்தல் வெய்யனாயின்" (கலித். 75:10). | |
| வெய்-வெய்யவன் = விருப்பமுள்ளவன். |
| வெய்-வெய்யோன் = விருப்பமுள்ளோன். "பொன்னறைதான் கொடுத்தான் புகழ்வெய்யோன்"(சீவக. 237). | | வெய்-வெய்ம்மை - வெம்மை = விருப்பம், வேண்டல். "வெம்மை வேண்டல்" (தொல். உரி. 36). | |
| ஒ.நோ:செள்-செய்-செய்ம்மை-செம்மை. |
| வேய்-வேய்ந்தோன்-வேந்தன். |
| வெள்-வேள்.வேட்டல் (வேள்தல்) = 1.விரும்புதல். "வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது" (புறம். 20). 2.நட்டல், நட்புச் செய்தல். "மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதா நட்பாட்சி" (நாலடி.215). 3. மணம்புரிதல். "மெய்ந்நிரை மூவரை மூவரும் வேட்டார்" (கம்பரா. கடிமணப். 102). 4. தாகங் கொள்ளுதல். 5. வேள்வி செய்தல். "ஓதல்வேட்டல்" (பதிற்.24:6). 6. இரத்தல். |
| க. பேள்.(b). |
| வேட்குஞ் செயல் ஆரியரதாயினும், வேட்டல் என்னுஞ் சொல் தமிழென அறிக. |
| வேட்டகம் (வேட்ட அகம்) = மணஞ் செய்த இடம், மனைவி பிறந்த வீடு. |
| வேள் = 1. விருப்பம். 2. திருமணம் "வேள்வாய் கவட்டை நெறி" (பழ. 360). 3. காதலை யுண்டு பண்ணுபவனாகக் கருதப்படும் காமன். "வேள்பட விழிசெய்து" (தேவா. 1172:8). 4. காதல் நோயை விளைத்தவனாக வேலன் வெறியாட்டிற் கூறப்படும் முருகன் (பிங்). 5. வேளாண்மை செய்யும் வேளாளர் தலைவனான குறுநில மன்னன். |
| |
| "வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்ல | தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி." (தொல். மர. 82) | "வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் | வாய்ந்தன ரென்ப அவர்பெறும் பொருளே." (மேற்படி 83) | "வில்லும் வேலும் கழலுங் கண்ணியும் | தாரும் ஆரமும் தேரும் கண்ணியும் | மன்பெறு மரபின் ஏனோர்க்கு முரிய." (மேற்படி 84) |
|
| |