|
| வேண்டுகோள் = 1. கோரிக்கை. 2. மன்றாட்டு (பிரார்த்தனை). "வென்று பத்திரஞ் செய்துநின் வேண்டுகோ ளென்றார்" (திருவிளை. விறகு. 51). |
| வேண்டும்-(1) ஒழுங்கான வினை (Regular verb) |
| 1. படர்க்கை எதிர்கால வினைமுற்று. |
| எ-டு: அவன் வேண்டும் (வேண்டுவான்), அவள் வேண்டும் (வேண்டுவாள்), அது வேண்டும், அவை வேண்டும். | |
| 2. பன்மை யேவல் வினை. |
| எ-டு: நீம் (நீயிர். நீவிர், நீர்) வேண்டும். |
| 3. எதிர்காலப் பெயரெச்சம். |
| எ-டு: வேண்டும் பொருள். |
| இம் மூவகை வினையிலும், வேண்டுதல் வினை விரும்புதல், கோருதல், இரத்தல், கெஞ்சுதல், மன்றாடுதல் என்னும் பொருளது. | |
| 1. வேண்டும்-(2) ஒழுங்கற்ற வினை (Irregular Verb) |
| வேண்டும் = (தனிவினையும் துணைவினையும்) 1. தேவை குறிக்கும் வினை. வீடுகட்ட எனக்குப் பணம் வேண்டும். .2. இன்றியமையாமை குறிக்கும் வினை. நோயாளிக்கு மருந்து வேண்டும். 3.விருப்பங் குறிக்கும் வினை. என் பேரனுக்குப் பேரன் எழுநிலை மாடத்திலிருந்து பொற்கலத்திற் பாலருந்த, நான் கண்ணாரக் காண வேண்டும். 4. ஒரு பெரு விருப்பங் குறிக்கும் வினை. |
| |
| "பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை யென்றும் | மறவாமை வேண்டும் இன்னும் வேண்டுநான் மகிழ்ந்து பாடி | அறவாநீ ஆடும்போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்" (பெரியபு. 30:60) |
|
| |
| 5. உறவு குறிக்கும் வினை. அவன் உனக்கு என்ன வேண்டும்? அவன் எனக்கு மாமன் வேண்டும். 6. கட்டாயம் அல்லது தப்பாமை குறிக்கும் வினை. உலக முழுதாள்வானும் ஒரு நாளிற் சாக வேண்டும், மெய்யெழுத்தை யெல்லாம் புள்ளியிட்டெழுதல் வேண்டும், தொடர்வண்டி வழிப்போக்கரெல்லாம் சீட்டு வாங்கியாதல் வேண்டும். |
| வேண்டாம் என்னும் எதிர்மறை வினையும் ஒழுங்குள்ளதும் இல்லதும் என இருவகைப்படும். |
| வேண்டாம் (1) ஒழுங்குள்ள வினை (Regular Verb) |
| 'செய்யாம், என்னும் வாய்பாட்டுத் தன்மைப் பன்மை எதிர்கால வினைமுற்று. |