|
| ம. விளக்கு, தெ. வெளுகு (g), க. பௌக்கு (b). |
| விளக்கு-விளக்கம் = 1. ஒளி. "ஊர்சுடு விளக்கத்து" (புறம்.7). 2. திங்கட் கலை (சது.) 3. விளக்கு. "குடியென்னும் குன்றா விளக்கம்" (குறள். 601). 4.இயங்கும் மோதிரம். "செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்து" (நெடுநல். 144). 5. தெளிவாக்குகை. 6. தெளிவான பொருள். 7. தெளிவு. நீ சொல்வது அவ்வளவு விளக்கமாக இல்லை (உ.வ.). 8. புகழ். "தாவில் விளக்கந் தரும்" (குறள். 853). 9. கேள்வி (விசாரணை) (யாழ். அக.). 10. கேள்வி நடைபெறும் வழக்கு மன்றம் (புதுவை.). 11. மிகுதி. விளக்கமாய்க் கொடு (நெல்லை). |
| விள்-விள-விளத்து. விளத்துதல் = விளக்கமாகக் கூறுபடுத்திச் சொல்லுதல் (விவரித்தல்). | |
| விளத்து-விளத்தம் = விளக்கம். |
| விள்-வெள் = ஒளிபொருந்திய. "வெள்வேல் விடலை" (அகம்.7). "வெள்வாள் வேந்தன்" (பு.வெ.8:27, கொளு). | |
| வெள்ளெனல் = தெளிவாதல். "வெள்ளென நோவா தோன்வயிற் றிரங்கி" (புறம். 207). |
| வெள்-வெள்ளை = விளக்கம்,தெளிவு. இறப்பாட்டு வெள்ளையா யிருக்கிறது. |
| வெள்-வெளி.வெளித்தல் = தெளிவாதல் (யாழ்ப்). |
| வெளி-வெளிச்சம் = 1. ஒளி. 2.விளக்கு. அந்த இருட்டறைக்குஒரு வெளிச்சம் கொண்டுவா. 3. தெளிவு. 4. பகட்டு. வெளிச்சம் போடுதல். |
| வெளி-வெளிச்சி = இரவில் ஒளிர்வதாகச் சொல்லப்படும் மரம். |
| வெளி-வெளிறு=வெளிச்சம். "கதிர்வே றுணையா வெளிறுவிரல் வருதி கண்டாய்" (பதினொ. திருவாரூர்மும்.9). | |
| வெள்-வெட்டு வெட்டுதல் = பளிச்செனல், மின்னுதல். மின்னல் வெட்டுகிறது, காலில் மிஞ்சி வெட்டுகிறது. |
| வெட்டு-வெட்டம் = வெளிச்சம் (நாஞ்.). |
| ம.வெட்டம். ஒ.நோ: Gk.photos, light. |
| வெட்ட= 1. தெளிவான (W.). 2. அதிகமான. |
| வெட்ட வெளிச்சம் = 1. மிகுந்த ஒளி. 2. மிகத் தெளிவு. 3. வெளிப்படை. அந்தக் கொலைச்செய்தி வெட்ட வெளிச்சமாகிவிட்டது (உ.வ.). |
| விள்-விளி-விடி. விடிதல் = 1. காலையில் இருள் நீங்கி ஒளி தோன்றுதல்.2. கதிரவன் தோன்றி ஒளி பரவுதல். "வெஞ்சுடர் தோன்றி விடிந்ததை யன்றே" (சீவக. 219). 3. துன்பம் நீங்கி யின்பமாதல். "நிற்பயம் பாடி விடிவுற் றேமாக்க" (பரிபா. 7:85).4. ஒரு வினைமுயற்சி அல்லது |