|
| 3. வெண்மைக்கருத்து |
| விள்-விள = வெண்டோடுடைய பழம், அப் பழமரம். |
| விள-விளம் விள-விளா = விளாம்பழம், விளாமரம். |
| விளா-விளவு (பிங்.). விளவு-விளவம். |
| விளா-விளாத்தி (மலை.). விள்-வெள்-வெள்ளில் = விளா. |
| வெள்-வெள்ளியம் = விளா. |
| விளவம்-விலவம்-வில்வம் = விளாவை யொத்த கூவிளம். |
| வில்வம்-வில்லம். "வடிவுடை வில்லம்" (திருமந். 1720). |
| வில்வ-வ. வில்வ, பில்வ. |
| விள்-விளர்-வியர்-வேர் = 1. நிலத்தின்கீழ் வெளுத்துள்ள மரவடி யுறுப்பு. 2. திரண்ட வேரான கிழங்கு. 3. சொல்லின் அடிப்பகுதி. வேர்ச்சொல் அகரமுதலி. 4. மூலம். 5. காரணம். |
| விள்-வெள் = வெண்மையான. "வெள்ளரைக் கொளிஇ" (மலைபடு. 562.) வெள்ளணி, வெண்குடை, வெண்டாமரை, வெண்ணெல். | |
| க. பிள்(b). |
| வெள்-வெள்ளம் = 1. வெண்ணிறமான அல்லது வெளிறின புது நீர்ப் பெருக்கு. "வெள்ளந்தாழ் விரிசடையாய்" (திருவாச. 3:1). 2. கடல் (பிங்.). "மகர வெள்ளத் திறுத்ததால்" (கம்பரா. கடல்காண். 2).3. கடலலை (பிங்.). 4. நீர் "வெள்ளத் தனைய மலர்நீட்டம்" (குறள்.595). 5. ஈரம் (பிங்.) 6. மிகுதி (சூடா.). 7. ஒரு பேரெண் (பிங்.). |
| |
| "ஐஅம் பல்என வரூஉம் இறுதி | அல்பெயர் எண்ணினும ஆயியல் நிலையும்." (தொல். புள்ளி. 98) |
|
| |
| ம., து. வெள்ளம், தெ. வெள்ளி. க. பெள்ள(b). |
| வெள்ளன் = வெண்ணிறத்தான். |
| வெள்ளாடு = வெண்ணிற ஆடு, அதே யினமான காராடு, செவ்வாடு.வெள்ளாளன் = வெண்களமன், வெளிறின பொன்னிறத்தானான உழுவித்துண்ணும் வேளாளன், உயர்வேளாளன், காராளன் என்பதற்கு எதிர். |
| வெள்ளான் = வெள்ளாளன். |
| வெள்-வெள்ளி = 1. வெண்மை. "வெள்ளி நோன்படை" (புறம். 41). 2. வெண்மாழை (உலோகம்). "விண்ணகு வெள்ளி வெற்பின்" (சீவக. 1646). 3. வெள்ளிக்காசு. இதன் விலை முப்பது வெள்ளி. (கீழ்நாட்டு வழக்கு) 4. உடு (நட்சத்திரம்). வெள்ளி முளைத்து விட்டது (உ.வ.). 5.விடி வெள்ளி."இலையிலிட வெள்ளி யெழும்" (காளமுகில்) 6. வெள்ளிக்கோள் |