|
| வீண்-வீணன் = 1. பயனற்றவன். "வீணர்க்குள் வீணன்" (அரிச். பு. சூழ்வினை. 19.) 2. சோம்பேறி (W) 3.தீயவன் (இ.வ.). | | வீண்-வீண்பு-வீம்பு = 1. வீண் புகழ்ச்சி. "வீம்பு நாரியர்" (திருப்பு. 772). 2. செருக்கு. 3. ஒட்டாரம்.வீம்பு-வீம்பன் = 1. வீண்பெருமைக்காரன். 2. செருக்கன். | |
| 3. ஒட்டாரம் பிடித்தவன். |
| விள்-விழல் = 1. பயனின்மை. "அழல தோம்பு மருமறை யோர் திறம் விழல தென்று மருகர்" (தேவா. 866:7). 2. பயனற்ற கோரைவகை. | | விழல்-விழலன் = ஒன்றுக்கும் உதவாதவன். "விழல னெனையாள நினைவாய்" (திருவேங். சத. 86). | | விழலன்-விழலி = ஒன்றுக்கும் உதவாதவள். "வீணிகள் விழலிகள்" (திருப்பு. 890). | |
| விழல்-விழலாண்டி = சோம்பித்திரியும் வீணன் (W). |
| விழலுக்கிறைத்தல் = வீண் பாடுபடுதல். |
| விள்-வெள்-வெட்டி = பயனின்மை. "என்னை வெட்டிக்குப் பெற்று வேலிக்காலிற் போட்டிருக்கிறதா?" | |
| ம.வெட்டி, தெ. வட்டி, ப.க. பிட்டி (b). |
| வெட்டிப்பயல் = பயனற்றவன் (W), வேலை செய்யாதிருப்பவன். |
| வெட்டிவேலை = பயனற்ற வேலை, சம்பளமில்லா வேலை. |
| வெறும்பிலுக்கு = வீண்பகட்டு. வெறும் பிலுக்கு வண்ணான் மாற்று. |
| வெறுமன் = வீண். "அப்பச்சை வெறுமனாகாமே" (ஈடு, 4: 10 : 7). |
| வெறுமனே = 1. வீணாக. 2. வேலையின்றி. "வெறுமனே தாளத்திற்கு இசைவிடும் எழிற்கையினை" (பதிற். 61, உரை). | | வெறு-வெறிது = பயனின்மை. "வெறிதுநின் புகழ்களை வேண்டாரி லெடுத்தேத்தும்" (கலித்.72). | |
| வெறிது-வறிது = பயனின்மை(பிங்.). |