|
| மெழுகுத்திரி = மெழுகு திரி. |
| மெழுகுத்துணி = மெழுக்குத் துணி. |
| மெழுகு பதம் = காய்ச்சப்பட்ட மருந்தெல்லாம் சேர்ந்து மெழுகு போல் திரண்டுவரும் பதம். |
| மெழுகு பனையன் = அம்மைநோய் வகை (யாழ். அக.). |
| மெழுகு பாகல் = பாகல்வகை (மூ.அ.). |
| மெழுகு பாளம் = மெழுகு தகடு. |
| மெழுகு பீர்க்கு = பீர்க்குவகை (உ.வ.). |
| மெழுகு பூச்சு = படிமைமேல் மெழுகு பூசியெடுக்கும் அச்சு. |
| மெழுகு பொம்மை = 1. மெழுகினாற் செய்த விளையாட்டுப் படிமை. 2. மெய்வருத்தந் தாங்கமுடியாதவ-ன்-ள். |
| க. மேனதுபொம்பெ (b.). |
| மெழுகு போடுதல் = மரப்பண்டங்கட்குப் பளபளப்பேற்ற மெழுகைக் காய்ச்சிப் பூசுதல் (W.). |
| மெழுகுமண் = கருக்கட்டும் பசைமண் (W.). |
| மெழுகு முட்டம் = மெழுகு பாளம் (இடவழக்கு). |
| மெழுகெண்ணெய் = மரப்பண்டங்கட்கு மெருகிட உதவும் மெழுகு சேர்த்த பூச்செண்ணெய் (இ.வ.). |
| மெழுகெழுதுதல்=துணியில் அச்சடிக்க மெழுகால் உருவமெழுதுதல் (இ.வ.). |
| கவனிப்பு: |
| ல ள ழ என்னும் மூன்று இனவொலிகளுள், முந்தியது லகரமே. 'ல' திரண்டு ளகரமும், 'ள' திரண்டு ழகரமும் ஆகும். |
| எ-டு: கால்-காள்-காழ் (கருமை). |
| லகரம் நேரடியாய் ழகரமாவது முண்டு. |
| எ-டு: மால்-மழை. |
| இனி, இத்தகைய சொற்றிரிவுகளில், இடைப்பட்ட ளகரச்சொல் இறந்துபட்ட தெனினுமாம். |