|
| தெ. மடத்தி, க. மடதி. |
| மடம்வால் - மடவரல் = 1. மடப்பம். "மடவர லுண்கண் வாணுதல் விறலி" (புறம். 89). 2. பெண். "மடவரனோக்கம்" (குறள். 1085). |
| மடமை - மடைமை = அறியாமை. |
| மடையன் = அறிவிலி. |
| மழ - மக = 1. இளமை. (யாழ். அக.)2. 2.பிள்ளை. "மந்திம்மக" (சீவக. 1897). 3. மகன் அல்லது மகள். "மகமுறை தடுப்ப." (மலைபடு: 185). |
| க. மக. (g). |
| மழவு - மகவு = 1. குழந்தை. "மகவுமுலை வருட" (கம்பரா. தைல. 13). 2. மகன். `கொண்டதோர் மகவினாசை (அரிச். பு. மயான. 20). 3. மரத்தில் வாழும் விலங்கின் குட்டி. |
| "கோடுவாழ் குரங்கும் குட்டி கூறுப." (தொல். மர. 13). |
| `மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் |
| அவையும் அன்ன அப்பா லான" (மேற்படி. 14) |
| க. மகவு (g). |
| மக - மகன் = 1. குழந்தை. (w). 2. ஆண்பிள்ளை. "செய்ந்நன்றி கொன்ற மகற்கு" (குறள். 110). 3. புதல்வன். "மகன்தா யுயர்பும்" (தொல். கற். 33). 4. சிறந்தோன். "நூல் கற்ற மகன்றுணையா நல்ல கொளல்" (நாலடி. 136). 5. போர் மறவன். `வேந்தன் மனம்போல வந்த மகன்" (பு.வெ. 2 : 5). 6. கணவன்."நினக்கிவன் மகனாத் தோன்றியதூஉம்" (மணி. 21 : 29). 7. விளையாடும் பருவத்துப் பெண் பெயரீறு. "பெண்மை யடுத்த மகனென் கிளவியும்" (தொல். பெய. 11) |
| "புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை, மாறோக்கத்தார் இக் காலத்தும் பெண்மகனென்று வழங்குப." (சேனா.உரை.). |
| மாறோக்கம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு. |
| க. மகம் (g.) |
| ஒ.நோ: mac (mak). A. Gaelic word signifying so, and prefixed to many surnames, as Mac Donald, Mac Grigor, & c. It is synonymous with Son in tentonic origin.... and with mab or Map (shortened into Ab or Ap) in Webh names. It is allied to Goth. magus, a son fen, magaths (G. magd, a maid.). |
| - The Imperial Dictionary of the English Language. |
| மக - மகள் = 1. பெண். "ஆயமகணீ யாயின்" (கலித். 107). 2. புதல்வி. "நல்கூர்ந்தாள் செல் மகள்" (கலித். 56). 3. மனைவி. "மனக்கினி. யார்க்கு நீ மகளாயதூஉம்" 9மணி. 21 : 30). 4. பெண் தெய்வம். எ-டு: திருமகள். 5. தெய்வத்தாய். எ-டு: நிலமகள். |
| ம.மகள், க. மகள் (g). |