|
| மதர் - மதர்வை = 1. மயக்கம். "மதர்வை வெங்கதிர் பரப்பு கிடந்தென" (சீவக. 322). 2. களிப்பு (பிங்.). 3. செருக்கு. "மதர்வை நோக்கமும்" (கந்தபு. தெய்வயா. 64.). 4. செழிப்பு. "மதர்வைக் கொம்பு" (சூளா. நகர. 25). |
| மதர்வு - மதவு = வலிமை. "மதவுநடை நல்லான்" (அகம். 14). |
| மதவு - மத. மதத்தல் = 1. மயங்குதல் (W.). 2. களித்தல். 3. செருக்குதல். 4. கொழுத்தல். 5. காம மிகுதல். 6. மதங்கொள்ளுதல். "மிகவும் மதத்து மதம் பொழிந்து" (ஞானவா. திருவா. 47). |
| மத - வ. மத. |
| மத = 1. மிகுதி. 2. வலிமை. 3. அழகு. 4. மடமை. "மதவே மடனும் வலியு மாகும்" (தொல். உரி. 79). | |
| மதவு - மதகு - மதங்கு - மதக்கு - மதக்கம். |
| ஒ.நோ: மயங்கு -மயக்கு - மயக்கம். |
| மதக்கம் = பேருண்டி, குடி, கஞ்சா முதலியவற்றா லுண்டாகும் மயக்கம். ஆறு மதக்கத்தினா லல்லவா எங்களை விழுங்காமல் விட்டிட்டது (அவிவே. கதை). 2 களைப்பு (யாழ். அக.). |
| மதமதப்பு = 1. செழிப்பு (திருவிருத். 9, வியா. ப. 71). 2. திமிர் (W.). 3. உணர்ச்சியின்மை (W.). |