பக்கம் எண் :

தேவும் தலமும்305

கிணங்க அவ்வூர்ப் பெயரிலுள்ள திரு என்னும் அடையைத் திரியாகத்
திரித்தனர்.5 அதனால் திருச் சிராப்பள்ளி என்றும், திரிசிரபுரம் என்றும்
வழங்கலாயிற்று.

                
ஊர்ப் பெயரும் வழக்காறும்

     முற் காலத்தில் தமிழ்ப் பெயர் பெற்றிருந்த சில ஊர்கள் இக்
காலத்தில் வடமொழிப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. அங்ஙனம்
மாறிய சில ஊர்ப் பெயர்களைக் காண்போம்:
 

மாயவரம்


     காவிரியாற்றின் பழந் துறைகளுள் ஒன்று மயிலாடுதுறை என்று பெயர்
பெற்றிருந்தது. நீல நிறம் வாய்ந்த கோல மாமயில் காவிரிச் சோலையில்
தோகையை விரித்துக் களி நடம் புரியும் காட்சி நம் மனக்கண் எதிரே
மிளிரும் வண்ணம் மயிலாடு துறை என்று முன்னோர் அதற்குப்
பெயரிட்டனர். தேவாரத் திருப்பாசுரங்களில் மயிலாடுதுறை என்றே அவ்வூர்
குறிக்கப்படுகின்றது. ஆயினும், பிற்காலத்தில் அப்பெயரை வடமொழியில்
பெயர்த்து அமைக்கத் தலைப்பட்டார்கள். மயில் என்பதற்கு வடசொல்
மாயூரம். அவ்வட சொல்லோடு துறை என்பதைக் குறிப்பதற்குப் புரம்
என்னும் சொல்லைச் சேர்த்தார்கள். எனவே, அவ்வூர்ப் பெயர்
மாயூரபுரமாயிற்று. அப்பெயரிலுள்ள புரம் வரமாகத் திரிந்து
மாயூரவரமாயிற்று. மாயூரவரம் நாளடைவில் மாயவரமாக மாறியுள்ளது.