குறிச்சிக் கிறைவன்” என்று சேக்கிழார் கூறுதல் காண்க - கண்ணப்ப
நாயனார் புராணம்,
43.
19. “காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி” -
ட்டினப்பாலை, 283.
20. தில்லை என்பது ஒரு வகை மரம்; “தில்லை யன்ன புல்லென் சடை” -
புறநானூறு, 252.
திருநெல்வேலியின்
வரலாற்றைக் கூறும் புராதனமாயுள்ள
புராணம் வேணுவ புராணம்
எனப்படும். அது நானூற்று ஐம்பத்து
நான்கு
திருவிருத்தங்களால் ஆயது. திருநெல்வேலிக்கோவிலில் பள்ளமான
இடத்திலிலுள்ள
சுயம்பு வடிவம் இன்றும் வேணுவன லிங்கம் என்று
அழைக்கப் படுகின்றது.
21. “ஆரே தாதகி சல்லகி ஆத்தி” - பிங்கல நிகண்டு.
22. இதனை ஆற்காடு என்று கொண்டு, ஆறு காடு அங்கிருந்தனவென்று
புராணம் கூறும்;
வடமொழியில்
ஷடாரண்யம் என்பர். அது குறித்து டாக்டர்
கால்டுவெல் கூறும் குறிப்பை
அவரது ‘ஒப்பிலக்கண’
முகவுரையிற் காண்க.
23. தேவாரத்தில் பழையனூர் ஆலங்காடு என்று இவ்வூர்
குறிக்கப்படுகின்றது.
24. ஆங்கிலத்தில் வழங்கும் பெயர் Pulicat என்பதாகும்.
25. தலையாலங்கானம் எனவும் வழங்கும், அங்கு நிகழ்ந்த போரில் வெற்றி
பெற்ற
பாண்டியன்,
தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன்
நெடுஞ்செழியன் எனச் சங்க
இலக்கியத்திற்
பாராட்டப்படுகின்றான்.
26. M.M Vol. III .p.1032.
27. மேற்குத் தொடர் மலையின் அடிவாரத்தில் பச்சையாற்றங்கரையில்
உள்ளது இவ்வூர்.
28. தமிழ்நாட்டில் ஐயனார், அரிகரபுத்திரன், சாஸ்தா முதலிய பெயர்கள்
ஆரியனைக்
குறிக்கும்-கந்த புராணம், மகா சாத்தாப் படலம் பார்க்க. |